Published : 20 Oct 2019 08:32 AM
Last Updated : 20 Oct 2019 08:32 AM

வழக்குகளின் தேக்கத்தை குறைக்க பரிந்துரைக்கப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ‘தேசிய வழக்காடல் கொள்கை’: உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வேதனை

சென்னை

வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க சட்ட ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 'தேசிய வழக் காடல் கொள்கை' கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வேதனை தெரிவித்தார்.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசு வழக்கறிஞர்களுக் கான 3-வது தென் மாநில 2 நாள் கருத்தரங்கம் நேற்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கலையரங்கில் தொடங்கியது.

சென்னை உயர் நீதிமன்ற மத்திய அரசு உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திக்கேயன் வரவேற்றார். உயர் நீதிமன்ற கூடுதல் சொலிசிட் டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் தலைமை வகித்தார். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முன்னிலை வகித்தார். உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி வாழ்த் துரை வழங்கினார்.

முன்னதாக இந்த கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசிய தாவது:

நீதி எது, அநீதி எது என்பதே தற்போது விவாதப்பொருளாகி விட்டது. பொதுவாக வழக்குகளை பொதுமக்கள் தொடர்பானவை, தொழிலாளர்கள் தொடர்பானவை, அரசு ஒப்பந்தங்கள், வரி, இயக் கங்கள் தொடர்பானவை, பொதுத் துறை சம்பந்தப்பட்டவை என 6 விதமாகப் பிரிக்கலாம். இதில் சமீபகாலமாக அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளின் தேக்கம் அதிக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

20 ஆண்டுகளாக..

வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க சட்ட ஆணையத்தின் 126-வது பரிந்துரையாக கடந்த 1988-ல் பரிந்துரைக்கப்பட்ட ‘தேசிய வழக்காடல் கொள்கை’ 20 ஆண்டு களாக கிடப்பில் போடப்பட்டு 2009-ல் மறுஆய்வு செய்யப்பட்டது.

தற்போது அந்த பரிந்துரை பல ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள் ளது. சமீபத்தில் மத்திய சட்டத் துறை உருவாக்கியுள்ள வழக்குகள் தகவல் மேலாண்மை செயலி மூலமாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 2,768 நீதிமன்றங்களில் 5 லட்சத்து 3,450 மத்திய அரசு தொடர்பான வழக்குகள் நிலுவை யில் உள்ளன.

4,715 சமரசத் தீர்வு வழக்குகள்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் மட்டுமே 4 லட்சத்து 30,137 அமெரிக்க டாலர் மதிப்புக்கு நிகரான இழப்பீடு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல சமரசத் தீர்வு காண்பதற்காக 4,715 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அரசுடன் ஒப்பந்தம் செய்ய வரும் தனியார் நிறுவனங்கள் தொடக்க நிலையில் இருந்தே சட்ட ஆலோசனைகள் பெறுவது போல மத்திய, மாநில அரசுகள் பெறாததால்தான் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற் போது வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க மாற்று தகராறு தீர்வு முறைகள் நல்ல பலனைத் தந்து கொண்டிருக்கின்றன.

இதன்மூலம் மேல்முறையீட்டு வழக்குகளின் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்து வருகிறது. தென்மாநில மத்திய அரசு வழக் கறிஞர்கள் வழக்குகளின் தேக்கத் தைக் குறைக்க தங்களது பங்க ளிப்பை வெகுசிறப்பாக ஆற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறு நீதிபதி வி.ராமசுப்பிர மணியன் தெரிவித்தார்.

இந்த விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.சுப்ரமணி யன், அனிதா சுமந்த், ஜி.ஆர்.சுவாமி நாதன், உயர் நீதிமன்ற கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் பி.எச்.அரவிந்த் பாண்டியன், நர்மதா சம்பத், அரசு ப்ளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் தென் மாநி லங்களைச் சேர்ந்த மத்திய அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

நிறைவாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உதவி சொலிசிட்டர் ஜெனரல் வி.கதிர்வேலு நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x