

பள்ளிக்கரணை
பள்ளிக்கரணையில் வாடகை செலுத்தாததால், சென்னை மாநக ராட்சிக்கு சொந்தமான 9 கடை களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலானோர் மாநக ராட்சிக்கு வாடகையை சரிவர செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள னர்.
மாநகராட்சி நோட்டீஸ்
இதைத் தொடர்ந்து, வாடகை பாக்கியை உடனடியாக செலுத்தும் படியும், தவறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன் பின்னரும் பலர் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர். இதையடுத்து, வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கும்படி மாநகராட்சி ஆணை யர் பிரகாஷ் உத்தரவிட்டார்.
ரூ.53 லட்சம் நிலுவை
அதன்படி, பெருங்குடி மண்ட லத்துக்கு உட்பட்ட பள்ளிக்கர ணையில் 40-க்கும் மேற்பட்ட கடை களை உதவி வருவாய் அலுவலர் பிரகாஷ் தலைமையிலான மாந கராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது 25 கடைகள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் ரூ.53 லட்சம் நிலுவை வைத்திருப்பது தெரியவந்தது. அதில் 16 கடைக்காரர்கள் ரூ.24 லட்சம் வாடகை பாக்கியை உடன டியாகச் செலுத்தினர். மற்ற 9 கடைகளின் உரிமையாளர்கள் வாடகை பாக்கியான ரூ.29 லட் சத்தை செலுத்த முன்வரவில்லை. அதைத் தொடர்ந்து, அந்தக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுபோன்ற ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.