வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே இயக்க ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மெட்ரோ ரயில்கள் வருகை: மெட்ரோ நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் தொடங்கி வைத்தார்

சென்னை முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கான முதல் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் ஆந்திர மாநிலம்  சிட்டியில் இருந்து நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆல்ஸ்டோம் நிறுவன நிர்வாக இயக்குநர் ஓடின் புரூனோ ஆல்ஸ்டோம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் எல்.நரசிம்மபிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.
சென்னை முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கான முதல் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் ஆந்திர மாநிலம்  சிட்டியில் இருந்து நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆல்ஸ்டோம் நிறுவன நிர்வாக இயக்குநர் ஓடின் புரூனோ ஆல்ஸ்டோம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் எல்.நரசிம்மபிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.
Updated on
1 min read

சென்னை

வண்ணாரப்பேட்டை - திருவொற்றி யூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் இயக்குவதற்கான முதல் ரயில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் வண்ணாரப் பேட்டையில் இருந்து திருவொற் றியூர் இடையே மெட்ரோ ரயில் வழித்தட முதல்கட்ட நீட்டிப்பு திட் டத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016, ஜூலை 23-ல் அடிக்கல் நாட்டினார். இத்திட்டத் தின் மொத்த மதிப்பு ரூ.3770 கோடி யாகும். மொத்தம் 9 கி.மீ. தூரம் உள்ள இந்த வழித்தடத்தில் 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன.

இதன்படி தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார் பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஷ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி கள் நடந்து வருகின்றன. இதே போல், தண்டவாளங்கள், சிக்னல் கள் அமைக்கும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மேற் கண்ட 9 கி.மீ. தூரத்துக்கு புதிய தாக 10 இணை ரயில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஆந்திர மாநிலம்  சிட்டியில் ஆல்ஸ்டோம் தொழிற் சாலைகளில் ரூ.200 கோடி மதிப் பில் மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. முதல் ரயில் தயாரிப்பு பணிகள் முடிந்த பிறகு இந்த ரயிலில் பிரேக், தரம், இருக்கை உள்ளிட்ட வசதிகள் குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி கள் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, முதல் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் ஆந்திர மாநிலம்  சிட்டியில் இருந்து நேற்று கொடியசைத்து தொடங்கி வைத் தார். அப்போது, ஆல்ஸ்டோம் நிறுவன நிர்வாக இயக்குநர் ஓடின் புரூனோ ஆல்ஸ்டோம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் எல்.நரசிம்ம பிரசாத் உட்பட பலர் உடனிருந்தனர்.

இந்த மெட்ரோ ரயில் சென் னைக்கு கொண்டுவரப்பட்டு, கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் பணிமனையில் சோதனை ஓட்டம் நடத்திய பிறகு, பயணிகள் பயன்பாட்டுக்கு வரும். மீதமுள்ள 9 இணை ரயில்கள் 2020 பிப்ரவரிக்குள் தயாரிக்கப்பட்டு மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in