

க.சக்திவேல்
கோவை
உணவுப் பொருட்கள் வீணடிப்பு, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், ஊட்டச்சத்து குறை பாடு ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டு உலக அளவிலான பட்டினி மதிப்பீடு (Global Hunger Index) ஆண்டுதோறும் வெளியிடப் பட்டு வருகிறது. 117 நாடுகளின் பட்டியலுடன் நடப்பு ஆண்டுக்கான மதிப்பீடு வெளியிடப்பட்டது. இதில், இந்தியா 102-வது இடத்தில் உள் ளது. இலங்கை (66), நேபாளம் (73), வங்கதேசம் (88), பாகிஸ்தான் (94) நாடுகள் நம்மைவிட முன்னேறிய நிலையில் உள்ளன.
ஒருவேளைகூட சரியான உண வின்றி, இங்கு பசியால் வாடும் பலர் இருந்தும், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், விழாக் களின்போது தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களில் 40 சதவீதம் வரை வீணடிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு மீதமாகும் உணவுப் பொருட்களை சேகரித்து, தேவைப் படுவோருக்கு விநியோகித்துவரும் பணிகளில், ‘நோ ஃபுட் வேஸ்ட்’, ‘ஃபீடிங் இந்தியா’, ‘ஃபீட் தி நீட் ஃபவுண்டேஷன்’, ‘ஃபுட் பேங்க் இந்தியா’ உள்ளிட்ட 30-க்கும் மேற் பட்ட தன்னார்வ அமைப்புகள் ஈடு பட்டு வருகின்றன. இவர்கள் மூலம் தினந்தோறும் லட்சக்கணக்கா னோருக்கு உணவளிக்கப்படுகிறது. ஆனால், மீதமாகும் உணவை எப் படி கையாள வேண்டும், விநி யோகிக்க வேண்டும், உணவைப் பெற்று விநியோகிப்போர், உணவை அளிப்போருக்கு உள்ள பொறுப்பு கள் என்ன என்பது குறித்து எந்த விதிமுறைகளும் இல்லை.
இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ), ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தர (மீதமாகும் உணவு மீட்பு மற்றும் விநியோகம்) விதிமுறைகள் 2019’ மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 2020 ஜூலை 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 தகவல்கள் கட்டாயம்
இதுதொடர்பாக மாநில உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, “புதிய விதிமுறை களின்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் சாப்பிடத் தகுந்த உணவுகளை மட்டும் விநியோகிக்கலாம். ஒவ் வொரு முறையும் மீதமாகும் உணவை அளிக்கும்போதும், பெறும்போதும் உணவைப் பெற் றுக்கொள்ளும் தன்னார்வ அமைப் பினர் மற்றும் உணவை அளிப் போர் உணவு வழங்கப்பட்ட தேதி, உணவின் பெயர், பேக்கிங் செய் யப்பட்ட உணவு வகை எனில் பேட்ச் எண், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என்பன உள்ளிட்ட 12 தகவல்களை பெற்று, அந்த விவரத்தை ஆவணமாக பராமரிக்க வேண்டும். இந்த செயல்பாடுகளை உணவுப் பாதுகாப்புத் துறை கண் காணிக்கும். இதன்மூலம், மீதமாகும் உணவை உண்போருக்கு பாது காப்பாக, தரமான உணவு கிடைக்க வழிவகை ஏற்படும்” என்றனர்.
தானியங்கள், பிஸ்கட், கேக்
புதிய விதிமுறைகள் குறித்து தமிழகத்தில் செயல்பட்டுவரும் ‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பின் நிறுவனரான கோவையைச் சேர்ந்த பத்மநாபன் கூறும்போது, “சமைத்து மீதமாகும் உணவுகள் தவிர பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களும் மீதமாகும்போது வீணடிக்கப்படுகின்றன. தானியங் கள், பிஸ்கட், கேக் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட் களை தயாரிக்கும் நிறுவனங்கள், அந்த பொருட்களை குறிப்பிட்ட காலத்துக்குள் விற்க முடிய வில்லையெனில் அதை அப்படியே டன் கணக்கில் கொட்டி அழித்து விடுகிறார்கள்.
இதனால், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணாவதோடு, தேவைப்படுவோருக்கு உண வும் கிடைக்காமல் போகும் நிலை இருந்தது. ஆனால், புதிய விதி முறைகள் அமலுக்கு வந்த பிறகு காலாவதி தேதிக்கு முன்னதாகவே அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ அமைப்புகள் விதிமுறைப்படி அவற்றை பெற்று தேவைப்படு வோருக்கு விநியோகிக்க முடியும். இதனால், பலர் பயன்பெறுவார் கள்” என்றார்.