Published : 20 Oct 2019 07:20 AM
Last Updated : 20 Oct 2019 07:20 AM

தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக வலுவடைந்து வருகிறது; அடுத்த 4 நாட்களுக்கு மழை தீவிரமாக இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை

தமிழகம், புதுச்சேரியில் படிப்படி யாக வலுப்பெற்று வரும் மழை அடுத்த 4 நாட்களுக்கு தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங் கியதில் இருந்து தமிழகம், புதுச் சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நீர் வரத்து அதிகரித்து பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளி லும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்ப தால், கரையோரங்களில் வசிக் கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி யுள்ளது.

அரசு பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 7,327 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிவாரண மையங்களாக தயார்படுத்தப்பட் டுள்ளன.

121 இடங்களில் பன்னோக்கு நிவாரண முகாம்களும் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றுக்கு மின்சார வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதி, ஜெனரேட்டர் வசதி போன்றவற்றை ஏற்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாக 4,393 இடங்கள் அடையாளம் காணப்பட் டுள்ளன. அந்த இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை தலைமை இயக்குநர் எஸ்.பால சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகப் பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அடுத்துவரும் இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக, கன்னியா குமரி, திருநெல்வேலி, ராமநாத புரம், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரிய லூர், பெரம்பலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இதே நிலை மேலும் இரு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.

தீபாவளி தினத்தில் மழை

தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது தமிழகம் வழியாக நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளதால், வரும் 4 நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப் புள்ளது. தற்போது உள்ள தரவு களின் அடிப்படையில், தீபாவளி பண்டிகையின்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 செ.மீ, கன்னியாகுமரி மாவட் டம் சிவலோகத்தில் 12 செ.மீ, திண்டுக்கல் மாவட்டம் வேடசந் தூரில் 7 செ.மீ, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், நெல்லை மாவட் டம் சங்கரன்கோவில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ, நெல்லை மாவட்டம் அம்பாச முத்திரம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோவை மாவட்டம் பீளமேடு, ஈரோடு மாவட்டம் பவானி, பவானிசாகர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடல் பகுதியில் காற்ற ழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் கேரளா கர்நாடகா மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே வரும் 20, 21 தேதிகளில், மேற்கூறிய இடங்களுக்கு மீனவர் கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு ஆய்வு மைய துணை தலைமை இயக்குநர் எஸ்.பால சந்திரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x