Published : 19 Oct 2019 10:43 AM
Last Updated : 19 Oct 2019 10:43 AM

நாங்குநேரி தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்

திருநெல்வேலி

நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையில் நிறைவடையும் நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

இத் தொகுதி இடைத்தேர் தலுக்கான வாக்குப்பதிவு வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. நாங்குநேரி தொகுதியில் 1,27,025 ஆண் வாக்காளர்கள், 1,29,385 பெண்கள் வாக்காளர்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என்று மொத்தம் 2,56,414 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 170 இடங்களில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கான இயந்திரங் கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் திருநெல்வேலி ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலிருந்து, நாங்குநேரி தாலுகா அலுவலகத்துக்கு ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்டுவிட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இத்தொகுதி யில் 23 பேர் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி, 299 வாக்குச் சாவடிகளிலும் 598 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

தேர்தலையொட்டி திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாங்குநேரி தாலுகா அலுவலகங்களில் 24 மணிநேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறைகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி மூலமும் இதுவரை 520 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத் தொகுதியில் பறக்கும்படை யினர் நடத்தியுள்ள சோதனையில் இதுவரை ரூ.19.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்குப்பின் வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும். வாக்குகள் எண்ணும் பணி வரும் 24-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணும் மையம் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஊதியத்துடன் விடுப்பு

திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொதுவிடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தொகுதியில் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 21.10.2019 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கிவரும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசால் இயங்கப்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 21.10.2019 அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இத் தொகுதியில் பதிவு பெற்ற வாக்காளர்களாக இருந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் பிற தொகுதிகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கும், அண்டை மாவட்டங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு அறை

திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் சு.சுடலைராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாங்குநேரி தொகுதியில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் வணிக நிறுவனங்கள், ஐ.டி., பிபிஓ, தொழிற்சாலைகள், பீடி நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் வரும் 21-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட தொழிலாளர்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் தேர்தல் நாளில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை திறக்கப்படவுள்ளது. தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்த புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலக தொலைபேசி மூலம் தெரிவிக் கலாம். புகார் செய்வதற்கான அலைபேசி எண்கள்:

தொழிலாளர் உதவி ஆணையர் சு. சுடலைராஜ்- 94436 56480, தொழிலாளர் துணை, உதவி ஆணையர்கள்- நளினி- 90036 93126, சவரீசன்- 72009 58244, பாலசுப்பிரமணியன் 97885 66266, சத்தியநாராயணன்- 90949 77520, நாகராஜன்- 97896 45475, செந்தில்குமரன்- 80725 04990.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x