Published : 19 Oct 2019 10:41 AM
Last Updated : 19 Oct 2019 10:41 AM

பல்லடம் அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வீடுகளுக்குள் படையெடுக்கும் ஈக்களால் அவதி: உணவு உண்ண முடியாமல் தவிக்கும் மக்கள்

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்

பல்லடம் அருகே ஊஞ்சப்பாளை யம் கிராமத்தில் கொத்து கொத் தாக படையெடுக்கும் ஈக்களால், ஒருவேளை உணவுகூட நிம்மதி யாக உண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

பல்லடத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் ஊஞ்சப்பாளை யம் கிராமத்தை ஒட்டிய பகுதி களில், இரண்டு கோழிப்பண்ணை கள் உள்ளன. இவை, கோழிக் குஞ்சு களை உற்பத்தி செய்யும் தாய்க் கோழி பண்ணைகள். முட்டையில் இருந்து கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்யும் பண்ணைகள் என்பதால், கோழிக்கழிவுகள் அதிகளவில் தேங்கும். இதனால், அவற்றில் இருந்து ஈக்கள் நாள்தோறும் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. பண்ணைகளில் உற்பத்தியாகும் ஈக்கள், அங்குள்ள வீடுகளுக்கும் படையெடுக்கின்றன. குடிநீர், கால்நடைகளுக்கு உணவு வைப்பது தொடங்கி அனைத்திலும் ஈக்கள் மொய்ப்பதால் கடும் சுகாதாரக் கேடு நிலவுகிறது.

குழந்தைகள் வீட்டில் உணவு உண்பதே பெரும் சிரமமான சூழ்நிலைதான். தட்டில் சாப்பாடு போட்டு வைத்துவிட்டு ஈக்களை விரட்டியபடி உண்ணும் சூழல் நிலவுகிறது. இரண்டு நிமிடம் விட்டுவிட்டால் ஈக்கள் மொய்க்கத் தொடங்கிவிடுகின்றன. ஊஞ்சப்பாளையம், பிஎம்எஸ் காலனி ஆகிய இரு பகுதிகளில் சுமார் 1500 குடும்பங்கள் உள்ளன. இந்த வீடுகளில் மழைக்காலங்களில் ஈக்கள் உற்பத்தியாகி, கடும் சிரமத்தை அளிக்கின்றன.

10 ஆண்டுகளாக இந்த இரு பண்ணைகள் இருந்தாலும், கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது அதிக ஈக்கள் உற்பத்தியாவதால் அன்றாட வேலையைக்கூட முறையாக செய்ய முடியவில்லை. 3 கி.மீ. சுற்றளவுக்கு ஈக்களின் நடமாட்டம் உள்ளது. ஈக்களை கட்டுப்படுத்த மருந்து தெளித்து அவற்றை கோழிப்பண்ணைகள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆனால், செலவை காரணம்காட்டி அலட்சியம் காட்டுவதால், கிராமத்தில் பலரும் சுகாதார சீர்கேட்டுடன் வாழ வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகள் தொடங்கி, நோய்வாய்ப்பட்ட முதியவர் வரை ஈக்கள் பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்' என்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் ஈக்கள் தொந்தரவு தொடர்பாக, திருப்பூர் கோட்டாட்சியர், பல்லடம் வட்டாட்சியர் மற்றும் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அலுவலர்களை அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x