

மதுரை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் புதிதாக 5,125 பெட்ரோல் நிலை யங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எண்ணெய் நிறு வனங்கள் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந் தூரைச் சேர்ந்த வெங்கிடுசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக ஊரக பகுதிகளில் பெட் ரோல் நிலையங்கள் தொடங்கு வதற்கான டெண்டர் அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ் தான் பெட்ரோலியம் ஆகிய நிறு வனங்கள் 25.11.2018-ல் அறிவிப்பு வெளியிட்டன.
தமிழகத்தில் 2018 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி 5,388 பெட் ரோல் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் கூடுதலாக 5,125 பெட் ரோல் நிலையங்கள் தொடங்க அறிவிப்பாணை வெளியிடப்பட் டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.
பெட்ரோல் நுகர்வு மற்றும் தேவை குறித்து உரிய கணக்கீடு செய்யாமல் பெட்ரோல் நிலையங் களின் எண்ணிக்கையை இரட்டிப் பாக உயர்த்தினால் ஏற்கெனவே பெட்ரோல் நிலையங்கள் நடத்தி வருவோர் பாதிக்கப்படுவர்.
பெட்ரோலுக்கான மாற்று எரி பொருள் கொள்கையை மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், பெட்ரோல் நிலையங்களின் எண் ணிக்கையை அதிகரிப்பது சட்ட விரோதமானது. இதனால் 5,125 பெட்ரோல் நிலையங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது, பெட்ரோல் நிலையங்களின் டெண்டர் அறிவிப் புக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி துரைராஜ் வெங்கடாசலம், பி.அய்யாக்கண்ணு, ஜமுனாராணி ஆகியோரும் பொதுநல மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் வாதிடும் போது, வாகனங்கள் பெருக்கம் அதிகமாகிவிட்டால் பெட்ரோல் நிலையங்களின் தேவையும் அதி கரித்துள்ளது. புதிதாக பெட்ரோல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்குவது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில், நீதிமன் றங்கள் தலையிட முடியாது எனத் வாதிடப்பட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் தரப் பில், இந்தியா முழுவதும் 3 எண் ணெய் நிறுவனங்கள் சார்பில் புதிதாக 78,493 பெட்ரோல் நிலை யங்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதி தாக பெட்ரோல் நிலையங்கள் அமைக்க உரிமம் கோரி 4,04,392 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் பெண்களிடம் இருந்து மட் டும் 93,888 விண்ணப்பங்கள் வந் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புதிய பெட் ரோல் நிலையங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக டெண்டர் அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்பு ஏற்கெனவே பெட்ரோல் நிலையங்கள் நடத்தி வருவோரிடம் கருத்துக் கேட்கவில்லை என மனு தாரர் தெரிவித்துள்ளார். இதிலி ருந்து இந்த மனு ஏற்கெனவே பெட்ரோல் நிலையங்கள் நடத்தி வருவோரின் நலனுக்காக தாக் கல் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது. இதனால் இந்த மனுக்களை பொதுநலன் மனுக் களாக கருத முடியாது. எனவே மனுக்கள் தள்ளுபடி செய்யப்படு கின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.இந்த மனு ஏற்கெனவே பெட்ரோல் நிலையங்கள் நடத்தி வருவோரின் நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.