Published : 19 Oct 2019 07:58 AM
Last Updated : 19 Oct 2019 07:58 AM

மாநில நெடுஞ்சாலைத் துறையில் இணைக்கப்பட்ட 1,268 கி.மீ. தொலைவிலான கிராம சாலைகளை ரூ.895 கோடியில் தரம் உயர்த்த அரசு முடிவு: உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்க கோரிக்கை

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 1,268 கி.மீ. தொலைவிலான கிராம சாலைகளை ரூ.895 கோடியில் தரம் உயர்த்த தமிழக மாநில நெடுஞ் சாலைத் துறை விரைவில் பணி மேற்கொள்ளவுள்ளது. இதற் கிடையே, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை பெருக்க உள் ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்க வேண்டுமென பொறியா ளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 60 ஆயிரம் கி.மீட்டருக்கும் மேற்பட்ட சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் இருக்கின்றன. மாநில சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள் என 3 வகையான சாலைகளை மாநில நெடுஞ்சாலைத் துறை நிர்வகித்து வருகிறது. ஒரு குறிப் பிட்ட அளவுக்கே கிராம, நகரங் களின் சாலைகளும் இருக்கின்றன.

இந்நிலையில், சமீப காலமாக மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் புதிய கொள்கையை தமிழக அரசு தீவிரமாக அமல் படுத்தி வருகிறது. அதன்படி கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங் கள் நிர்வகித்து வந்த சாலைகள் தற்போது மாநில நெடுஞ்சாலைத் துறையில் படிப்படியாக இணைக் கப்பட்டு வருகின்றன. இந்தச் சாலை களை தரம் உயர்த்தும் பணிகளும் விரைவில் நடைபெறவுள்ளன.

இதுதொடர்பாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘ஆண்டுதோறும் கிராமம் மற்றும் கிராம ஒன்றிய சாலைகள் படிப்படியாக நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டு, சாலைகள் தரம் உயர்வு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரம் கி.மீ. சாலைகள் ஒப்படைக்கப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருகி றோம்.

இந்த ஆண்டில் மட்டும் காஞ்சி புரம், திருவள்ளூர், கடலூர், சேலம், கோவை, திருச்சி, தஞ்சை, தேனி, மதுரை உட்பட 27 மாவட் டங்களில் 1,268 கி.மீ. தொலைவி லான 434 சாலைகளை மாவட்ட இதர சாலைகள் தரத்தில் ரூ.895.48 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்’’ என்றனர்.

இதுதொடர்பாக மாநில நெடுஞ் சாலைத் துறை பொறியாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணியில் முன்பெல்லாம் அந்தந்த கிராமத்தினரோ அல்லது அதைச் சுற்றியுள்ளவர்களுக்கோ ஒப்பந் தம் வழங்கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்படும். இதனால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கிராம பொருளாதார முன்னேற்றத்துக்கும் வழி வகுக் கும்.

ஆனால், சமீபகாலமாக பெரிய அளவிலான ஒப்பந்ததாரர்களால் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத னால், உள்ளூர் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. எனவே, அந்தந்த கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்க வேண்டும். இதனால், அங்கு வேலைவாய்ப்பு பெருகும். மேலும், தரமான சாலை அமைய சாலை பாதுகாப்பு வல்லுநர்கள் மூலம் புதிய சாலைகளில் தணிக்கையும் நடத்த வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x