Published : 19 Oct 2019 07:54 AM
Last Updated : 19 Oct 2019 07:54 AM

மழைக் காலம் தொடங்கியுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் கட்டாயம் இருக்க வேண்டும்: சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை

மழைக் காலம் தொடங்கியுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஜெனரேட்டர் வைத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

மழைக்கால நோய் தடுப்பு பணிகள், மருத்துவ முன்னேற் பாடுகள் குறித்து தனியார் மருத் துவமனைகளுக்கான ஆயத்த அலுவல் கூட்டம் சென்னை எழும் பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் நாகராஜ், பொது சுகாதாரத் துறை இயக்குநர் க.குழந்தைசாமி, மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக் குநர் சுவாதி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதிலும் இருந்து தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிவில் செய்தியாளர் களிடம் சுகாதாரத் துறை செயலா ளர் பீலா ராஜேஷ் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங் கிவிட்டது. இந்த சூழலில் தனியார் மருத்துவமனைகளில் செய்யப் பட வேண்டிய வசதிகள், ஏற்பாடு கள், முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும். மருத்துவ மனைக்குள் மழைநீர் வந்தாலும் பாதிப்பு ஏற்படாதவாறு, தரையில் இருந்து 5 அடி உயரத்தில் ஜென ரேட்டரை வைக்க வேண்டும். ஜெனரேட்டரை இயக்கத் தேவை யான டீசலை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அவசர கால நடவடிக்கை

அவசர காலத்தில் நோயாளி களை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். போதிய அளவு மருந்து, மாத்திரைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், செயற்கை சுவாசக் கருவிகள் அனைத்தும் வைத் திருக்க வேண்டும். நோயாளி களுக்கு சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்ச லால் கடந்த 10 மாதங்களில் 3,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. வடசென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், கடலூர், தருமபுரி, சேலம், வேலூர், கோவை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

வியாழன்தோறும் டெங்கு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப் படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி கண்டறியப்பட்டு, அதற்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பொதுமக்க ளும் முழு ஒத்துழைப்பு அளித்தால் தான் டெங்கு காய்ச்சலை முழுமை யாக கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு பீலா ராஜேஷ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x