Published : 19 Oct 2019 07:31 AM
Last Updated : 19 Oct 2019 07:31 AM

பம்ப்செட் தொழில் நெருக்கடியால் பலர் வேலையிழப்பு; வரி விதிப்பில் மாற்றம் செய்யாவிடில் மேலும் பாதிப்பு ஏற்படும் அபாயம்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்படும் சிறு மோட்டார் பம்ப்செட் தொழிற்கூடம். படம்: ஜெ.மனோகரன்

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏறத்தாழ 3 ஆயிரம் சிறு, குறு மோட்டார் பம்ப்செட் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் அரை ஹெச்.பி. முதல் 20 ஹெச்.பி. வரையிலான மோட்டார் பம்ப் செட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிலைச் சார்ந்து 15 ஆயிரம் சிறு, குறு தொழிற்கூடங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணியாற்றுகின்றனர்.

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின்னர் பம்ப் செட் உற்பத்தித் தொழில் பல் வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோலியப் பொருட் கள் விலை உயர்வும் கடும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை பம்ப் செட் மற்றும் உதிரிபாகங்கள் தயா ரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.மணிராஜ் கூறியதாவது: ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின் னர், பம்ப்செட் தயாரிப்புக்குத் தேவையான இரும்பு, காந்த அலைத் தகடுகள், காப்பர், காஸ் டிங், துருப்பிடிக்காத சீல் தகடுகள், ஸ்டீல் ராடுகள் ஆகியவற்றின் விலை சுமார் 20 சதவீதம் உயர்ந் தது. பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வும், மூலப் பொருட்களின் விலையை உயர்த்தி யது. ஏனெனில், மோட்டார் பம்ப் செட்டுக்கான உதிரிபாகங்களில் 70 சதவீதம் பெட்ரோலியப் பொருட் களால்தான் தயாரிக்கப்படுகின்றன. உதிரிபாகங்களின் விலை 10 முதல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. போக்குவரத்து செலவு 50 சத வீதத்துக்கும் மேல் அதிகரித் துள்ளது.

முந்தைய வாட் வரி விதிப் பில், பம்ப்செட்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிப்பு இருந்தது. ஜாப் ஒர்க் தொழிற்சாலைகளுக்கு முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப் பட்டிருந்தது. ஆனால், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின்னர் அனைத்துக்கும் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. தொடர் போராட் டங்கள் காரணமாக இது 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மூலப் பொருட் கள் கொள்முதலுக்கு 18 சதவீதம் வரி விதித்து, விற்பனைக்கு 12 சதவீதம் மட்டுமே வரி விதிப்பதும் தொழிலைக் கடுமையாகப் பாதித் துள்ளது. எனவே, அனைத்துக் கும் 5 சதவீத வரி மட்டுமே விதிக்க வேண்டும். அதேபோல, ரூ.1.5 கோடி மதிப்புக்குகீழ் வணிகம் புரியும் நிறுவனங்களுக்கு, ஜிஎஸ்டி யில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்.

அதிக வரி, மாதந்தோறும் வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் தொழில்முனைவோர் அவதிக்குள் ளாகியுள்ளனர். இதனால், கடந்த சில மாதங்களில் 10 சதவீதத்துக் கும் மேற்பட்ட சிறு, குறுந் தொழிற் கூடங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் 15 முதல் 20 சதவீதம் தொழிற் கூடங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலை தொடருமானால் மேலும் பலர் வேலையிழக்க நேரி டும். எனவே, வரி விதிப்பில் மாற் றங்களை செய்வது அவசியம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, மோட்டார் பம்ப்செட் ஏற்றுமதிக் கான வழிகாட்டிக் குழுவை அமைத் தால், மோட்டார் பம்ப்செட்களை ஏற்றுமதி செய்யலாம். அரசுக்கு அந்நியச் செலாவணியும் கிடைக் கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் அதிர்ச்சி

உதிரி பாகங்கள் விலை உயர்வு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால், சிறு, குறுந் தொழில்முனைவோரால் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் பம்ப்செட் விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின் னர் மூலப் பொருட்கள் மற்றும் மோட்டார் பம்ப்செட் விலை குறையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், விலை அதிகரித்தது அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச் சிக்குள்ளாக்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x