Published : 19 Oct 2019 07:14 AM
Last Updated : 19 Oct 2019 07:14 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது: வாக்காளர்களுக்கு பணம் தந்ததாக திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

சென்னை

இடைத்தேர்தல் நடக்கவுள்ள விக்கிர வாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிர வாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அன்று காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த இரு தொகுதிகளிலும் கடந்த 2 வாரங்களாக தீவிர பிரச்சாரம் நடந்து வந்தது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். விக்கிரவாண்டி யில் திமுக வேட்பாளருக்கும், நாங்கு நேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கும் ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வரு கின்றனர்.

இந்த இரு தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இது தொடர்பாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்ட அறிவிப்பு:

விக்கிரவாண்டி, நாங்கு நேரி சட்டப்பேரவைத் தொகுதி களில் அக். 19-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்குமேல் எந்த ஒரு பொதுக் கூட்டம், ஊர் வலத்தை யாரும் ஒருங் கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற் கவோ கூடாது. எந்த ஒரு தேர்தல் விவ காரத்தையும் திரைப்படம், தொலைக் காட்சி, எப்எம் ரேடியோ, வாட்ஸ் அப், முக நூல், ட்விட்டர் வாயிலாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கக்கூடாது. விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக் கப்படும். தொகுதியின் வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகி கள், கட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் சத்ய பிரத சாஹூ நேற்று கூறியதாவது:

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அக்.16-ம் தேதி நிலவரப்படி ரூ.50 லட்சத்து 43 ஆயிரம் ரொக்கம் உட்பட ரூ.95 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம், தங்கம், வெள்ளி மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாங்கு நேரி தொகுதியில் ஒரு வீட்டில் இருந்து வெளியில் வீசப்பட்ட ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி யுள்ளனர். காவல் துறை, வருமான வரித் துறை மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஆகியோரின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாங்குநேரியில் பணப் பட்டுவாடா செய்த தாக திமுக எம்எல்ஏ ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில் 139 மையங் களில் 275 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 50 சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. நாங்குநேரியில் 170 மையங்களில் உள்ள 299 வாக்குச் சாவடிகளில், 110 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை. விக்கிரவாண்டி தொகுதிக்கு 1,917 தேர்தல் பணியாளர்களும், நாங்கு நேரிக்கு 1,460 தேர்தல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி அருகே அம்பலம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பெரிய குளம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவண குமார், தனது ஆதரவாளர்களுடன் தங்கி யிருந்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் அந்த வீட்டில் இருந்து வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. அப் பகுதி மக்கள், வீட்டில் இருந் தவர்களைத் தாக்கி சிறை பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மூலக்கரைப்பட்டி போலீஸா ரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அங்கு சென்ற னர். அப்போது, வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்த சிலர் கட்டுக்கட்டாக பணத்துடன் தப்பிச் சென்று விட்டதாகவும், மீதி பணம் சிதறிக் கிடப்பதாகவும் கூறினர். அங்கிருந்து ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரி கள் கைப்பற்றினர். பணப்பட்டுவாடா குறித்த புகாரில் எம்எல்ஏ சரவண குமார் உட்பட 6 பேர் மீது 5 பிரிவின் கீழ், சந்தேகத்தின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவில்லை என்றும், சிலர் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து தாக்கி பணம், பொருட் களை சூறையாடியதாகவும் எம்எல்ஏ தரப்பைச் சேர்ந்த சுடலைகண்ணன் என்பவர் தனியாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில், 25 பேர் மீது 4 பிரிவுகளில் மூலக்கரைப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

களக்காடு அருகே உள்ள கட்டார் குளத் தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அருப்புக் கோட்டையை அடுத்த குறுந்த மடத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் மாரியப்பன் உள்ளிட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய் துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், பத்மநேரி பகுதியில் பணம் கொடுத்துக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத 5 பேர், பறக்கும்படையினரை பார்த்ததும் 50 ஆயிரம் ரூபாயை கீழே போட்டுவிட்டு தப்பிச்சென்றதாகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x