Published : 18 Oct 2019 12:52 PM
Last Updated : 18 Oct 2019 12:52 PM

விடுலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாக 4 நாட்கள் விசாரணை: ஆணையர் சங்கீதா பின்ரா மதுரை வருகை

மதுரை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணைக்காக ஆணையர் சங்கீதா பின்ரா செகல் தலைமையில் குழுவினர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று (அக்.18) காலை மதுரை வந்தடைந்தனர்.

மதுரை பயணியர் விடுதியில் வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை 4 நாட்கள் விசாரணை நடைபெறுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்த விசாரணையில் மதிமுக பொதுக் செயலாளர் வைகோ, மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் கலந்துகொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை ஏன் நீக்க வேண்டும் என்பது தொடர்பாக தங்களின் கருத்துகளை விசாரணை குழுவினரிடம் பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, தமிழீழ விடுலைப் புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசரணைக்காக, விசாரணை ஆணையர் சங்கீதா பின்ரா செகல் தலைமையில் குழுவினர் மதுரை வந்துள்ளனர்.

அவர்களுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மதுரையில் முகாமிட்டிருக்கும் 4 நாட்களில் முக்கிய பிரமுகர்கள் விசாரணைக்காக ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைகோ இன்று பிற்பகல் 3 மணியளவில் விசாரணைக்காக ஆஜராகிறார்.

தொடர்ந்து இந்த விசாரணைக் குழுவானது மதுரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலும் விசாரணை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x