

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டு பேருந்து நிலையம் அருகே அரசு போக்குவரத்து பணி மனை அமைந்துள்ளது. இங்கி ருந்து தாம்பரம் செல்லும் பயணி களுக்காக, டி60 என்ற தடம் எண் கொண்ட, எல்.எஸ்.எஸ். பேருந்து மற்றும் விரைவு பேருந்து என தலா 5 பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
கூடுவாஞ்சேரி, மறை மலைநகர், மகேந்திராசிட்டி மற்றும் பெருங்களத்தூரை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த பிள்ளை கள், செங்கல்பட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல இந்த பேருந்துகளையே பிரதானமாக பயன்படுத்துகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங் கியுள்ள இலவச பஸ் பாஸைக் கொண்டு, மேற்கூறிய வழித்தடத் தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்கலாம் என செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனை தெரிவித்துள்ளது.
ஆனால், டி60 விரைவு பேருந்தில் பஸ் பாஸ் வைத்திருக் கும் பள்ளி மாணவர்கள் பயணிக்க, நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனுமதிப்பதில்லை என பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவையில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, டி60 பேருந்தில் பயணிக்கும் பொதுமக்கள் சிலர் கூறியதாவது: டி60 விரைவு பேருந்தில் பஸ் பாஸ் வைத்திருக்கும் பள்ளி மாணவர் களுக்கு அனுமதி மறுக்கப்படு வதால், மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது. செங்கல்பட்டு பணி மனை அதிகாரிகள், பஸ் பாஸ் மூலம் விரைவு பேருந்தில் பயணிக்கலாம் என்றே தெரி விக்கின்றனர். ஆனால், நடத்துநர்களோ, அதிகாரிகள் கூறியதால்தான் பஸ் பாஸ் மாண வர்களை விரைவு பேருந்தில் அனுமதிப்பதில்லை என் கின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, பஸ் பாஸ் மூலம் டி60 வழித்தடத்தில் உள்ள அனைத்து விதமான பேருந்துகளிலும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து நடத்து நர்களிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் விளக்கமளித்தனர்.