

விழுப்புரம்
டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்த லில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, தும்பூர் கிராமத்தில் நேற்று மாலை முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் செய்த திட்டங்களை பட்டியலிட்டு சொல்லி வருகிறோம். நாங்கள் பொய் சொல்வதாக பொத் தாம் பொதுவாக ஸ்டாலின் பேசி வரு கிறார். எங்கள் பணிகளை மறைக் கவே முடியாது. உள்கட்டமைப்பு களை சிறப்பாக செய்து வருகி றோம். திமுக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் ஆட்சியில் 2010-ல் நீட் தேர்வு வந்தது. நீட் தேர்வை தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இது தொடர்பான வழக்கு நிலுவை யில் உள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு கார ணம் திமுகதான். அவர்கள் பொய் வழக்கு போட்டதால் அவர் உடல் நலம் குன்றினார். அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்னவுடன் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது இந்த ஆட்சியில்தான். மக்களை போட்டு குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்த, கடந்த 26.9.2016-ல் அறிவிப்பு கொடுத்து வேட்பு மனு கொடுக்கப்பட்ட போது வழக்கு போட்டு நிறுத்தியது திமுக. வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு நீதி மன்றத்தில் சமர்பிக்கப்பட்டு டிசம் பருக்குள் இத்தேர்தல் நடத்தப்படும்.
திமுக குடும்ப கட்சி. அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட முதல்வராக முடியும். உதயநிதி பெரிய அரசியல் ஞானி. பொன் முடிக்கு உதயநிதி பிரச்சாரம் செய் கிறார். சட்டமன்றத்தில் உதய நிதியை புகழ்ந்து பேசுகிறார். வாரிசு அரசியல் என்ற அடிப்படையில் அந்தக் கட்சி நடந்து வருகிறது.
பாஜகவுக்கு நாங்கள் அடிமை யாக இருக்கிறோம் என்கிறார். பாஜக ஆட்சியில் கூட்டணியில் திமுக இருந்தபோது, முரசொலி மாறன் உடல்நலமில்லாமல் இருந் தார். அப்போது அவர் இலாக்கா இல்லாத மந்திரியாக இருந்தார். அப்போது, பாஜக மக்கள் விரோத கட்சியாக தெரியவில்லையா? இவ்வாறு அவர் பேசினார்.