Published : 18 Oct 2019 09:54 AM
Last Updated : 18 Oct 2019 09:54 AM

காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைப்பு 

சென்னை

காவல் துறையினரின் நலத் திட்டங்களுக்காகவும், அவர்களின் குறைகளை போக்கும் வகையிலும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியா தலைமையில் 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை போலீஸார் சங்கம் அமைப்பது மற்றும் அதுதொடர்பான நடவடிக் கைகளில் ஈடுபடுவது தடை செய் யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கள் தங்கள் நல திட்டங்கள் தொடர் பாக அவ்வப்போது குரல் கொடுத்து வருவது தொடர்கிறது.

இதற்கிடை யில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டப் பேரவையில், காவல்துறை மானிய கோரிக்கையில் காவல் ஆணை யம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி னார். இதற்கு பதிலளித்து முதல்வர் கே.பழனிசாமி பேசும்போது, ‘‘ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விரைவில் 4-வது காவல் ஆணை யம் அமைக்கப்படும்’’ என்று அறி வித்தார்.

இதற்கிடையில், காவலர்கள் நலன் மற்றும் குறைதீர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற காவல் ஆணையம் அமைக்க வேண் டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள், காவல் துறையின ருக்கான சீர்திருத்த ஆணையத்தை அமைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, 4-வது காவல் ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, ‘‘காவலர்களின் குறைகளைக் களையவும், அவர் களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கவும் காவல் ஆணையம் அமைக்கப்பட்டு, உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆகியோர் டிச.18-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் 4-வது காவல் ஆணையத்தை அமைத்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, காவல் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஏஸ் அதிகாரியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செயலராக இருந்தவருமான ஷீலா பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் மாநில தகவல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணையத்தின் உறுப்பினர் களாக வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம், அரசு முன்னாள் இணைச்செயலாளர் அறச்செல்வி, கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 1969, 1989 மற்றும் 2006-ம் ஆண்டு களில் திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதி இருந்தபோது 3 காவல் ஆணையங்கள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x