Published : 18 Oct 2019 09:28 AM
Last Updated : 18 Oct 2019 09:28 AM

ஆம்பூர் அருகே மீண்டும் நடமாட்டம்: சிறுத்தை தாக்கி 2 மாடுகள் உயிரிழப்பு ? - வனப்பகுதியில் கூண்டு வைத்து கண்காணிப்பு

ஆம்பூர்

ஆம்பூர் அருகே மாட்டுத் தொழுவத் தில் கட்டியிருந்த 2 பசுமாடுகளை சிறுத்தை அடித்துக்கொன்றதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, வனத்துறை சார் பில் சிறுத்தையை பிடிக்க வனப் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள் ளது.

ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு கிழக்கு பகுதியில் அடர்ந்த காப்புக் காடுகள் உள்ளன. ஆம்பூர் வனச் சரகத்துக்கு உட்பட்ட காடுகளை யொட்டி சொக்கரிஷிகுப்பம், சாமரிஷிகுப்பம், நாட்டான் ஏரி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (45). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் காப்புக்காடுகளை ஒட்டியுள்ளது.

இந்நிலையில், தனது நிலத்தில் மாட்டு கொட்டகை அமைத்து 2 பசு மாடுகளை கட்டியிருந்தார். நேற்று காலை அந்த மாடுகளை மேய்ச்ச லுக்கு ஓட்டிச்செல்ல அமுதா மாட்டு கொட்டகை அருகே சென்றார். அப்போது கொட்டகைக்கு அருகே யுள்ள விவசாய நிலத்தில் பசுமாடு ஒன்று குடல் சரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது. இதைக்கண்ட அமுதா கூச்சலிட்டார். உடனே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

2 மாடுகளில் ஒன்று மட்டுமே உயிரிழந்து கிடந்தது. மற்றொரு மாடு காணவில்லை. உடனே, பொதுமக்கள் மாயமான மாட்டை தேட தொடங்கிய போது, சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் மற்றொரு மாடும் உயிரிழந்து கிடந்தது. அந்த மாட்டை சிறுத்தை அடித்துக்கொன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருப்பத்தூர் வனத்துறையினருக்கு சாமரிஷிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், திருப்பத்தூர் உதவி வனப்பாதுகாவலர் ராஜ் குமார் தலைமையில் ஆம்பூர் வனச் சரக அலுவலர் கவிதா, வனவர் சதீஷ் உட்பட 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் என்பதால் வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், இதே கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்த மான 2 மாடுகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை அடித்து கொன்றதாகவும், தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் கூறினர். மேலும், கடந்த முறை சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை. எனவே, இந்த முறை கண்காணிப்பு கேமராக்கள் வைத்து, சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் உத்தரவின்பேரில் பெரிய கூண்டு ஒன்று கொண்டு வரப்பட்டு வனப் பகுதியில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,‘‘சிறுத்தை நடமாட் டம் இருப்பதாக பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் வனப் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள் ளது. இந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படும். வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்துப்பணியில் ஈடுபட உத்தர விடப்பட்டுள்ளது. மாடுகளை சிறுத்தை தான் அடித்து கொன்றதா? என ஆய்வு செய்து வருகிறோம். சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் விரைவில், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x