

விழுப்புரம்
அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.57 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்த லில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து, விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் நேற்று அவர் பேசியது:
திமுக தலைவர் ஸ்டாலின், நிறை வேற்ற முடியாத திட்டங்களைச் சொல்லி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். நாங்கள் உண்மையை சொல்லியதால், இப்போது தைரியமாக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளோம். 'அதிமுக அரசில் எந்தத் திட்ட மும் நிறைவேற்றவில்லை' என்று ஸ்டாலின் சொல்கிறார். எவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன என்பது மக்களுக்குத் தெரியும்.
இடைத்தேர்தல் வந்தால்தால் தான் ஸ்டாலினுக்கு திண்ணை நினைவுக்கு வரும். உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வ ராக இருந்த போது அவருக்கு திண்ணை நினைவுக்கு வர வில்லையா?
விழுப்புரம் மாவட்டத்தில் கூட் டுக் குடிநீர் திட்டம் நடைமுறைப் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக் கும் திட்டமும் விரைவில் நிறை வேற்றப்படும். நந்தன் கால்வாயை சீரமைக்க ரூ. 40 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டு ஆரம்ப கட்டப் பணிகள் நடக்கின்றன. பனமலை ஏரி உட்பட 11 ஏரிகளில் சாத்தனூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆட்சியில் குடி மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்பட்டு வருகிறது. இதற்காக ரூ 1,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறு, ஓடைகளில் தடுப்பணை கட்ட ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 9,838 கோடி கடன் கொடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2019 வரை 57,316 கோடி கடன் கொடுத்துள்ளோம். தற்போது தமிழகத்தில் 6,81,000 சுய உதவிக்குழுக்கள் உள்ளன. எங்களிடம் அனைத்து புள்ளி விவரங்களும் உள்ளன.
அதிமுகதான் 69 சதவீத இட ஒதுக்கீடு தந்தது. ராமசாமி படை யாச்சியார் படத்திறப்பு விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்ள வில்லை. சமூகத்துக்காக உழைத்த 40 பேருக்கு இந்த அரசு மரியாதை செய்துள்ளது. மறைந்த தலைவர் களுக்கு மரியாதை செலுத்துவது எங்கள் கடமை. ஏ. கோவிந்தசாமி யின் நூற்றாண்டு விழாவில் திமுக வினர் யாரும் கலந்து கொள்ள வில்லை என்றார். அமைச்சர்கள் சி. வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.