

ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
மதுரை அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளில் 872 குழந்தைகள், 136 கர்ப்பிணிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கடைசி நேரத்தில் மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைப்பதே காரணம் என தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆயிரம் பிரசவங்களில் கடந்த 2011-ல் 22 ஆக இருந்த சிசு மரணம் 2017-ல் 16 ஆக குறைந்தது. சுகாதாரத்தில் கேரளாவுக்கு அடுத்ததாக சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
தமிழகத்தில் பிற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை கனிசமாக குறை ந்துவரும் நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிசு மற்றும் பச்சிளம் குழந்தைகள் இறப்புகள் குறையாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது.
சிசு மற்றும் பச்சிளம் குழந் தைகள் நலப்பிரிவில் பிறந்த (neonatal) ஒரு நாளில் இருந்து 28 நாட்களுக்குள் 2017-ம் ஆண்டில் 463, 2018-ல் 409 குழந்தைகள் இறந் துள்ளன. 2 ஆண்டுகளில் மொத்தம் 872 குழந்தைகள் இறந்துள்ளனர்.
28 நாட்களில் இருந்து ஓராண்டு வரையிலான குழந்தைகள் இறப் பும் அதே அளவிலே உள்ளது. பிரசவத்துக்கு 2017-ம் ஆண்டில் 24,078 கர்ப்பிணிகளும், 2018-ல் 22,375 கர்ப்பிணிகளும் அனுமதிக் கப்பட்டனர். இதில், 2017-ல் 81 கர்ப்பிணிகளும், 2018-ல் 55 கர்ப்பி ணிகளும் இறந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 136 பேர் இறந்துள்ளனர்.
இந்த இறப்பு விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரி மைச்சட்டத்தில் பெற்ற சமூக ஆர்வலர் வெரோனிகா மேரி கூறி யதாவது:
தமிழக மருத்துவத்துறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியன வெவ்வேறு இயக்குநரகங்கள் தலைமையில் தனித்தனியாக செயல்படுகின்றன. இதனால், இவைகளுக்கு இடையே ஒருங்கி ணைப்பு இல்லை.
இதில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிரசவ த்துக்கான அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டும் மருத்து வர்கள் பற்றாக்குறையால் சிக் கலான பிரசவங்கள், இரவு நேரப் பிரசவங்கள் அரசு மருத்துவக்க ல்லூரி மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்வது அதிகரித் துள்ளது.
குறிப்பாக மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவில் மருத்துவர்கள் பணிபுரியாததால் சாதாரண பிரசவத்துக்குக்கூட கர்ப்பிணிகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பிவிடுகின்றனர். பயண அலைக்கழிப்பு மற்றும் கடைசி நேரத்தில் மேல் சிகிச் சைக்குப் பரிந்துரைப்பதால் இறப்புகள் தவிர்க்க முடியவில்லை. அதனால் மதுரை அரசு மருத் துவமனையில் அதிகளவு சிசு, கர்ப்பிணி மரணங்கள் ஏற்படுகின்றன.
அனைத்து அரசு தாலுகா மருத்துவமனைகளிலும், அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் இருப்பது போல அதிநவீன மருத்துவக் கருவிகள் மற்றும் 24 மணிநேர மகப்பேறு மருத்துவர், குழந்தை நல மருத் துவர் மற்றும் மயக்கவியல் மருத்துவர் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
சிக்கலான பிரசவத்தின்போது கர்ப்பிணிகள் நீண்ட தூரம் பயணிப்பதைத் தவிர்ப்பதோடு உடனடியாக தரமான மருத்துவ சிகிச்சையை அருகிலுள்ள ஊர்களில் கிடைக்க மருத்து வத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சிசு மற்றும் கர்ப்பிணிகளின் இறப்புகள் வெகுவாகக் குறையும். மேலும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற தேசிய சுகாதாரத்திட்ட வழிக்காட் டுதல்களை முழுமையாகப் பின் பற்ற துரித நடவடிக்கை தேவை, என்று கூறினார்.