

கடலூர்
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகி றது. இதைத் தொடர்ந்து குழந்தை கள் முதல் பெரியோர் வரை ஏராளமானோருக்கு இருமல் மற்றும் தலைவலியுடன் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மாவட் டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 3 நாட் களாக மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
கடலூர், சிதம்பரம், காட்டு மன்னார் கோவில், பண்ருட்டி, விருத் தாசலம், குறிஞ்சிப்பாடி, பரங்கிப் பேட்டை உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்கள் குவிந்து, சிகிச்சை பெற்று சென்ற வண்ணம் உள்ளனர்.
காய்ச்சலால் அவதிப்பட்ட 500 பேருக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.
இவர்களில், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கலா (48), கீழ்மாம் பழம்பட்டு அர்ச்சனா (13), காட்டு மன்னார்கோவில் சரவணன் (27), பாளையங்கோட்டை பரசுராமன் (20), நாராயணபுரம் பீரித்தா (15), வாழப்பட்டு சரோஜா (65), பணிக்கன்குப்பம் முருகன் (37), நெல்லிக்குப்பம் துரைசாமி (45), வடலூர் மேட்டுக்குப்பம் சவுந் தர்யா (20), திருத்துறையூர் கவிதா (24) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கடலூர் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) டாக்டர் ரமேஷ்பாபுவிடம் கேட்ட போது, "டெங்குவால் பாதிக்கப்பட் டவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர்'' என்றார்.
''கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத் துவக் குழுவினர் கொசு மருந்து அடித்தல், மருந்து தெளித்தல், குடிநீரில் குளோரினேஷன் செய் தல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர். காய்ச்சல் உள்ளவர் களுக்கு மருத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளு மாறு பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது'' என்று துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் கீதா தெரிவித்துள்ளார்.