Published : 17 Oct 2019 09:54 AM
Last Updated : 17 Oct 2019 09:54 AM

தமிழகத்தின் இடஒதுக்கீட்டு முறை பாதிக்காதவாறு அண்ணா பல்கலைக்கு தேசிய அந்தஸ்து வழங்க நடவடிக்கை: உயர்கல்வித் துறை செயலர் தகவல் 

சென்னை

தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறை பாதிக்காதவாறு அண்ணா பல்கலைக்கழகத்தின் தேசிய சிறப்பு அந்தஸ்து செயல் படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா தெரிவித்தார்.

மத்திய மனிதவளத் துறை மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய் வறிக்கையின்படி பிஎச்டி எனப்படும் ஆராய்ச்சி படிப்புகளை அதிகம் படிக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முன்னணியில் இருந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 6,207 பேர் பிஎச்டி முடிக்கின்றனர்.

இந்நிலையில், ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்தி தரமான ஆய்வாளர்களை உருவாக்குவது தொடர்பான கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனி யார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா உட்பட பல் வேறு துறை அதிகாரிகள், பேராசி ரியர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

புதுமையான ஆய்வுகளுக்கான கருவை அடையாளம் காணுதல், தரமான ஆய்வுகளை மேற் கொள்வதற்கான வழிமுறைகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடந்தது. அதன்பின் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு சார்பில் ஆராய்ச்சி படிப்புகளை ஊக்கு விக்க தொடர்ந்து பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. அதன்பலனாகவே ஆண்டு தோறும் அதிக மாணவர்கள் பிஎச்டி முடிக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப் பட்டாலும் மாநில அரசின் கட்டுப் பாட்டில்தான் செயல்படும்.

தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறை உட்பட அம் சங்கள் பாதிக்காதவாறு அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து செயல்படுத்தப்படும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.மேலும், பட்டதாரிகள் நெட், ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும் பிஎச்டி படிப்பையும் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x