

சென்னை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர், அவர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. ஒப்பந்தத்தில் போடப்படும் எந்த ஒரு ஷரத்தும் முழுமையாக நிறை வேற்றப்படுவதில்லை. பல போராட்டங்கள், வேலைநிறுத்தம் எல்லாம் செய்துதான் ஒப்பந்தங் கள் போடப்படுகின்றன. ஒவ்வொரு ஒப்பந்தத்துக்கும் தொழிலாளர் களுக்கு அதிகமான வேலை இழப்பு ஏற்படுகிறது.
வாகன நெரிசலில் பேருந்தை இயக்குவதே அவர்களுக்கு பெரிய சாதனையாக உள்ளது. பல கி.மீ. தொலைவுக்கு பேருந்தை இயக்க வேண்டும், டீசலை மிச்சப்படுத்த வேண்டும், அதிக வசூலை கொண்டுவர வேண் டும் என தொழிலாளர்கள் கட்டா யப்படுத்துகின்றனர்.
பணியில் இருந்து ஓய்வு பெறும் போது அவர்களுக்கான பணப் பலன்களை உடனடியாக கொடுக் காமல், பல ஆண்டுகளாக அலை கழிக்கின்றனர். பல ஆண்டுக ளாக பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்வதில்லை.
பொதுச் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் தங்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என்பதே போக்கு வரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே, போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.