உணவு பாதுகாப்புத் துறை சார்பில் இனிப்பு, பலகார தயாரிப்பு கடைக்காரர்களுக்கு பயிற்சி

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் இனிப்பு, பலகார தயாரிப்பு கடைக்காரர்களுக்கு பயிற்சி
Updated on
1 min read

சென்னை

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது குறித்து இனிப்பு, பலகார தயாரிப்பு கடைக்காரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு சென்னையில் உள்ள பல்லாயிரக் கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்கள் அதிக அளவில் இனிப்புகள் மற்றும் கார வகைகளை சொந்த ஊர்களுக்கு வாங்கிச் செல்வர். மேலும் தீபாவளி திருநாளன்று பெற்றோரும் குழந்தைகளுக்கு இனிப்பு, கார வகைகளை வாங்கிக் கொடுப்பர். அன்று வீட்டுக்கு வரும் விருந் தினர்களும் கையுடன் இனிப்பு, கார வகைகளை கொண்டு வரு வர். அதனால் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் அதிக அளவில் இனிப்பு, கார வகைகள் விற்பனையாக வாய்ப்புள்ளது.

தற்போது, உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு, அதை அமல்படுத்த உணவு பாதுகாப்புத் துறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மாவட்ட அலுவலகம் சார்பில், இனிப்புகள், பலகார தயாரிப்பு நிறுவனங் களுக்கு, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை கடைப்பிடிப்பது குறித்து, தியாகராயநகரில் நாளை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறும் போது, இனிப்பு, காரவகைகளை தயாரிக்கும்போது, பயன் படுத்தப்படும் எண்ணெயை எத் தனை முறை பயன்படுத்த வேண் டும், பயன்படுத்திய பிறகு என்ன செய்ய வேண்டும், அதில் வண்ணங்களை சேர்க்கும் விதம், அதை பாக்கெட்டில் அடைக்கும் விதம், உரிய உரிமம் பெறுவது உள்ளிட்டவை குறித்து இனிப்பு கடைக்காரர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறோம்.

இந்த விதிகளை மீறும் கடைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், அதன் மூலம் கிடைக்கும் தண் டனை விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும் அக்கூட்டத்தில் தெரிவிக் கப்படும். இந்த பண்டிகையின் போது, அனைத்து இனிப்பு, கார வகை தயாரிப்பு கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் சோதனையிடவும் திட்டமிட் டுள்ளனர்.

இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in