Published : 16 Oct 2019 10:25 AM
Last Updated : 16 Oct 2019 10:25 AM

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி எம்.பி கேள்வி

விழுப்புரம்

விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு வாக்கூரில் நடந்த பாமக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி, சிவகுமார், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்புமணி, மாநில துணைத்தலைவர் அரிகரன் மாவட்ட செயலாளர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பாமக இளைஞ ரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி பேசியது:

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகி றார். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த போது வன்னியர்களுக்கு ஏதாவது செய்து உள்ளீர்களா?

பாமக 30 ஆண்டு காலம் நேர்மை யான அரசியலை செய்துள்ளது. நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர், கொங்கு வேளாளர் கட்சிக்கு பல கோடி லஞ்சம் கொடுத்து கூட்டணியில் வைத்துள்ளீர்கள். டாக்டர் ராமதாஸைப் பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை.

நீட் தேர்வு கொண்டு வந்தது, கச்சத் தீவை ஒப்படைத்தது, இவை கள் அனைத்தும் செய்தது திமுக - காங்கிரஸ் கட்சிகள் தான். அனிதா மரணம் ஏற்பட்டது திமுகவால்தான். மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று ஸ்டாலின் கூறுகிறார், இந்தத் திட்டத்திற்கு கையெழுத்திட்டது திமுகதான். தமிழ் நாட்டில் நடக்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஸ்டாலின்.

நந்தன் கால்வாய் திட்டத்தை 60 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலாக கொண்டு வந்தவர் கோவிந் தசாமி, ஆனால் 5 முறை ஆட்சி செய்திருக்கிற திமுக, இந்தத் திட்டத்தை பற்றி ஏதாவது சிந்தித்தது உண்டா? நீர் மேலாண்மை திட்டம் பற்றி பாமக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு செய்ததால், தமிழக அரசு முன்வந்து நீர்மேலாண்மைக் காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி இருக்கிறது.

இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் அதிமுகவின் ஆட்சிக் காலம் உள்ளது. ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப் படை பிரச்சினைகளை செய்து தர முடியும். எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? ஒன்றுமே நடக்காது. இதற்கு முன்னுதா ரணம் நடந்து முடிந்த எம்.பி தேர்த லாகும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x