Published : 16 Oct 2019 10:23 AM
Last Updated : 16 Oct 2019 10:23 AM

பிரதமர் மோடி வேட்டி கட்டி வந்ததற்கு உதயநிதி ஸ்டாலின் தரும் புது விளக்கம்

விழுப்புரம்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை மாம்பழப்பட்டு, கக்கனூர், வீரமூர், அதனூர், தென் னமாதேவி ஆகிய கிராமங்களிலும், மாலையில் உடையாநத்தம், பழை யகருவாட்சி, வெள்ளையாம்பட்டு, பெருங்கலாம்பூண்டி, நங்காத்தூர் ஆகிய கிராமங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:

வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் பெயர், முதல் சின்னத்தில் வேட்பா ளர் புகழேந்திக்கு வாக்கை பதிவு செய்ய வேண்டும். முதல்வரின் பெயர் கூட இங்கிருக்கும் மக்க ளுக்கு தெரியவில்லை. அப்படிப் பட்டவர்தான் ஆட்சி பொறுப்பில் உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டவர் என்று அவரே சொல் லிக் கொள்கிறார்.

தமிழ்நாட்டிற்கு வருவதற்கு பிரத மர்மோடிக்குப் பயம்; அதனால் தான், தன்னை யாரும் கண்டு பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவர் வேட்டி கட்டி வந்து போயிருக்கிறார்.

மக்களைப் பற்றி கவலைப்படாத அதிமுக ஆட்சிக்கு இந்த இடைத்தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். புகழேந்தியை நீங்கள் தேர்ந்தெடுத்து சட்டமன் றத்திற்கு அனுப்பி வைத்தால், இந்தத் தொகுதியில் உள்ள பிரச்சி னைகளை உங்கள் குரலாக சட்டசபையில் பேசி தீர்த்து வைப் பார். இன்னும் 5 நாட்கள்தான் இருக் கின்றன. தேர்தலுக்கு தேர்தல் வருபவர்கள் நாங்கள் கிடையாது. எப்போதும் மக்களோடு பணியாற் றுகிற கட்சி திமுக. இந்த ஆட்சி மீதுள்ள அதிருப்தியை மக் கள் பதிவு செய்யும் வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x