

மாமல்லபுரம்
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த தும் விரைவில் மாமல்லபுரத்தில் உள்ள கலைச் சின்னங்களை மின் னொளியில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல் லபுரத்தில் அமைந்துள்ள குடை வரை கற்சிற்பங்கள் நுட்பமான வேலைப்பாடுகளுடன் உருவாக் கப்பட்டுள்ளன. இதனால், யுனெஸ்கோ அங்கீகாரம் மற்றும் அரசின் புவிசார் குறியீடு போன்ற அங்கீகாரங்கள் வழங்கப்பட் டுள்ளது. இந்த பாரம்பரிய கலைச் சின்னங்களை தொல்லியல் துறை பாதுகாத்து, பராமரித்து வருகிறது.
இச்சிற்பங்களை கண்டு ரசிப் பதற்காக, வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின் றனர். இச்சிற்பங்களை காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரையில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தலைவர்கள் வருகைக்குப் பிறகு
இந்நிலையில், பிரதமர், சீன அதிபர் வருகையை ஒட்டி, மேற் கண்ட கலைச் சின்னங்களின் அருகே மின்விளக்குகள் அமைக் கப்பட்டன. இரு தலைவர்களும் செல்லும் வரையில் மின்னொளி யில் கலைச் சின்னங்கள் ஜொலித் தன. தலைவர்கள் பார்வையிட்டு சென்ற பின்பு மின்விளக்குகள் ஒளிராததால், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால், குடைவரை சிற்பங் களை மின்விளக்கு வெளிச்சத்தில் இரவிலும் கண்டு ரசிக்க அனு மதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
இதுகுறித்து, மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சிற்பங்களை இரவிலும் கண்டு ரசிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.
அதேசமயம், இரவில் கலைச் சின்னங்களை பார்வையிட துறை ரீதியான பரிந்துரைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு மற்றும் துறை ரீதியான ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் இரவு 10 மணி வரையில் மின் னொளியில் சிற்பங்களை சுற்றுலா பயணிகள் காண முடியும். அதற் குள் மேற்கண்ட கலைச் சின்ன வளாகங்களில் பல்வேறு பாது காப்பு அம்சங் களை ஏற்படுத்து வதற்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்பட்டுள்ளது’’ என்று அவர் கூறினார்.