எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால ஆட்சி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, மூன்றடைப்பு கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.படம்: மு.லெட்சுமி அருண்
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, மூன்றடைப்பு கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி

தமிழகத்தில் தற்போது நடக்கும் அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று நாங்குநேரி இடைத்தேர் தல் பிரச்சாரத்தில், துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித் தார்.

இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து மூன்றடைப்பு பகுதியில் நேற்று அவர் பேசியதாவது:

தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினைகளுக்கு தீங்கு வந்த போது, யார் ஆட்சியில் உரிமைகள் காப்பாற்றப்பட்டன என்பதை சீர் தூக்கி பார்க்க வேண்டும்.

காவிரி நதி நீர் பிரச்சினையில் 2007-ல் இறுதித் தீர்ப்பு வெளியா னது. அப்போது தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயல லிதா பலமுறை வலியுறுத்தினார். ஆனால், அதற்கு எந்த நடவடிக் கையும் கருணாநிதி எடுக்க வில்லை. 2011-ல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, அதனை, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடச் செய்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, `காவிரி நதிநீர் ஆணை யத்தை கலைப்போம்’ என்றார். அதேபோல், `மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம்’ என்று கூறி னார். அந்த காங்கிரஸ் கட்சிதான் நாங்குநேரியில் போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு வாக்காளர்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

திமுக கூட்டணியினர் கடந்த மக்களவைத் தேர்தலில் பொய் யான வாக்குறுதிகளைக் கூறி வெற்றிபெற்றனர். அது, இப் போது நடக்காது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக, காங்கிரஸ் டெபாசிட் இழக்கும்.

திமுக ஆட்சி மின்சார பற்றாக்குறையை தீர்க்க முடியாத ஆட்சியாக இருந்தது. 2011-ல் ஜெயலலிதா முதல்வரானதும் ஒரே ஆண்டில் மின் பற்றாக்குறையை போக்கினார். இப்போது மின் மிகை மாநிலமாக தமிழகம் உள் ளது. இதுதான் பொற்கால ஆட்சி.

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்சாலைகள் தொடங்கப் பட்டன. கடந்த 8 ஆண்டுகளில் 1.47 லட்சம் கோடி ரூபாய்க்கு தொழிற் சாலைகள் தொடங்கப்பட்டு, 37 ஆயி ரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலி னுக்கு முதல்வராகும் ஆசை உள்ளது. ஆனால், முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வர மாட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஏழை மக்களுக்கு அதிமுக அரசு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது.

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in