Published : 16 Oct 2019 08:47 AM
Last Updated : 16 Oct 2019 08:47 AM

அதிகரிக்கும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள்: தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் புலனாய்வு அமைப்புகள்

டி.ஜி.ரகுபதி

கோவை

தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தொடர்ந்து, ரகசிய கண்காணிப்புப் பணியை புலனாய்வு அமைப்புகள் தீவிரப் படுத்தி உள்ளதாகவும் தெரியவருகி றது.

இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவு நபர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அமைப்பினர் நட வடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் 33 பேர் உட்பட, நாடு முழுவதும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு டன் தொடர்பில் இருந்ததாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ஆரம்பக்கட்ட ஆதரவு எண்ண ஓட்டம் உள்ள இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்ச லிங் அளித்து ஆதரவு எண்ணத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

200 பேருக்கு கவுன்சலிங்

கொச்சி தலைமையக என்ஐஏ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தொடர்பாக தமிழகத்தில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆரம்பக்கட்ட ஈர்ப்பு உள்ள 200-க்கும் மேற்பட்டோருக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி அனுப்பப்பட்ட வர்கள் தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றனர். தவிர, மாநிலம் முழு வதும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு எண்ண முள்ள 110-க்கும் மேற்பட்டோரின் செயல்பாடுகள் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகின்றன. விசாரணை நடத்தப்பட்டவர்களில், சிலரை தவிர பெரும்பாலானவர்கள் 35 வயதுக்கு உட்பட்ட இளையோர்.

சமூக வலைதளங்களில் வரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்க வீடியோக்கள், முகநூல் மூலம் ஏற்படும் தொடர்பு, ஆதரவு பேச்சு உரைகள் ஆகி யவை மூலம் மூளைச்சலவை செய் யப்பட்டும், ஐஎஸ்ஐஎஸ் அமைப் பால் ஈர்க்கப்பட்டு சதி திட்டங்கள் தீட்டியதாகவும் கைது செய்யப் பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோவை, சென்னை, தஞ்சாவூர், ராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகளால் சோதனை நடத்தப் பட்டுள்ளது.

இளைஞர்களின் செயல்பாடு களை பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள மூத்தவர்கள் தொடர்ந்து கண் காணிக்க வேண்டும். இளைஞர்க ளின் நட்பு வட்டாரம், அவர்களது பின் னணி, முகநூல் தொடர்பு, அதிகம் பார்க்கும் வீடியோக்களின் வகை, அவர்களது செயல்பாடு போன்ற வற்றை கண்காணிக்க வேண்டும். அதில், தீவிரவாத இயக்கத்தின் மீது ஈர்ப்பு தெரிந்தால், உடனடியாக தகுந்த ஆலோசகர்கள் மூலம் அவர் களுக்கு கவுன்சலிங் அளித்து, ஆரம்ப கட்டத்திலேயே அவர்களை தீவிரவாத எண்ண ஓட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

‘‘நாட்டில் மற்ற மாநிலங்க ளைவிட, தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நபர்கள் அதிகம் கைது செய்யப்பட்ட தகவல் வெளி வந்ததை தொடர்ந்து, குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவினர், சிறப்பு புலனாய்வு பிரிவினர், உளவுப் பிரிவு, மத்திய உளவுப் பிரிவு, கியூ பிரிவு போன்ற ரகசிய புலனாய்வு அமைப்பினர் தங்களது ரகசிய கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். நேரடியாகவும், சமூக வலைதள தொடர்புகளையும் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர்’’ என புல னாய்வு அமைப்பின் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கூறும்போது, ‘‘கோவை மாநக ரில் சந்தேகத்துக்குரிய நபர்களின் செயல்பாடுகள் சிறப்புப் பிரிவு கள் மூலம் தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகின்றன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x