Published : 16 Oct 2019 08:44 AM
Last Updated : 16 Oct 2019 08:44 AM

சிதம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் சென்றவருக்கு அபராதம்: போலீஸ் நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும்

சென்னை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு அபராதம் விதித்த போலீஸாரின் நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

சிதம்பரம் கஞ்சித்தொட்டி முனை சாலையில் கடந்த 13-ம் தேதி சிதம்பரம் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியை மடக்கி, இருசக்கர வாகனத்தில் இருவர்தான் வர வேண்டும், நான்கு பேர் வந்தது தவறு என்றும் அசல் ஆவணங் களைக் கேட்டும் அபராதம் விதித் தனர். இதனால் இரு தரப்பின ருக்கும் வாக்குவாதம் ஏற்பட் டது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி போலீ ஸார் மீது கடுமையான விமர்சனங் கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து சிறப்பு எஸ்ஐயையும் காவலரை யும் ஆயுதப்படைக்கு மாற்றி கட லூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அபினவ் நேற்று உத்தர விட்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சட்டப்படி காவலர்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை. இருசக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் சில விஷயங்களில் விதிவிலக்கு உள்ளது. குடும்பத்துடன் வருப வர்களை கஷ்டப்படுத்தி இருக்க வேண்டாம்.

சிதம்பரத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸாரையும் அபராதம் வசூ லிக்க பயன்படுத்தியதே இந்தப் பிரச்சினைக்கு காரணம். வழக் கமான போக்குவரத்து காவலர் கள் இதுபோல நடந்து கொள்வ தில்லை. தம்பதியர் தங்களுடன் 11 வயது வரையிலான தங்கள் குழந்தையை 3-வது நபராக அழைத்துச் செல்லலாம். 5 வயதை கடந்திருந்தால் கட்டாயம் ஹெல் மெட் அணிய வேண்டும். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந் தைகளை அழைத்துச் செல்லக் கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்’’ என்றார்.

வழக்கறிஞர் மஞ்சுளா கூறும் போது, “இருசக்கர வாகனத்தில் 2 குழந்தைகளை அழைத்து வந்தது சட்டப்படி தவறு என்று போலீஸார் கூறுகின்றனர். ஒரு பெண்ணை இரு ஆண் போலீ ஸார் வழிமறித்து விசாரணை நடத்துவதும் சட்டப்படி தவறு தான். பெண் போலீஸை வைத்து தான் விசாரித்திருக்க வேண்டும்.

மேலும் போலீஸார் தொப்பி அணியால் இருப்பதும் தவறு. அந்தப்பெண், நாங்கள் தீபாவ ளிக்கு ஜவுளி எடுக்கச் செல்கி றோம் என்று கெஞ்சுகிறார். அதன் பிறகும் அபராதம் விதித்தது இரக் கமற்ற செயல். இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போதே, பலர் ஹெல்மெட் அணியாமல் அதே போலீஸாரைக் கடந்து செல்கின்றனர். அவர்களை இந்த போலீஸார் நிறுத்தக்கூட செய்யவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x