நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் 

நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் 
Updated on
2 min read

சென்னை

நிர்வாகிகளின் பதவிக்காலம் முடி வடைந்தபிறகு நடத்தப்பட்ட நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

நடிகர் சங்கத் தேர்தல் தொடர் பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் ஆகியோர் தங்களது வாதத்தில் கூறியதாவது:

கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் 80 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். பதவிக்காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் வரை பழைய நிர்வாகிகள் பதவியில் தொடர எந்தத் தடையும் இல்லை. தற்போது நடிகர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள் ளன. நடிகர் சங்கத்துக்கு தனி அதி காரியை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு தற்போதுள்ள நிர் வாகிகளுக்குத்தான் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. எனவே, அவர் கள் இன்னும் செயல்பாட்டில்தான் உள்ளனர்.

சங்கத்தின் மீது புகார்கள் வந்தால் அதுகுறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் மட்டுமே பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. தேவைப்பட்டால் சங்கத் தின் பதிவைக்கூட அவரால் ரத்து செய்ய முடியும். ஆனால், அந்த சங்கத்தின் தேர்தலை நடத்தக் கூடாது என உத்தரவிட அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

வாக்காளர் பிரச்சினை, நிதி முறைகேடு போன்ற சங்கப் பிரச்சி னைகள் தொடர்பாக சிவில் நீதி மன்றத்தில்தான் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேட முடியுமேயன்றி, பதிவாளரிடம் சென்று பரிகாரம் தேட முடியாது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு மட்டும் தலையிட்டு இருக்காவிட்டால் இந்நேரம் நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று இருப்பார்கள். இந்த தேர்தல் முறைப்படி உரிய பாதுகாப்புடன் நடத்தப்பட்டுள்ளது

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

அப்போது தமிழக அரசு தரப் பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.அர விந்த்பாண்டியன் வாதிட்டதாவது:

சங்கத்துக்குள் நடக்கும் பிரச் சினைகள் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும், தேவைப்பட்டால் தேர்தலை ரத்து செய்யவும் சங்கங்களின் பதிவாள ருக்கு முழு அதிகாரம் உள்ளது. தனி அதிகாரி நியமிக்கப்பட்டுவிட்டால் அந்த சங்கத்தின் அனைத்து பொறுப்புகளும் அதிகாரிகளிடம் வந்துவிடும். சம்பந்தப்பட்ட அதி காரிதான் அந்த சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடி வெடுக்க வேண்டும். அதேபோல தேர்தல் நடவடிக்கைகளில் தலை யிட்டு அதை நிறுத்தவோ அல்லது தள்ளிப் போடவோ மாவட்ட பதிவாளருக்கு எல்லா அதிகாரமும் உள்ளது.

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018 அக்டோ பர் மாதத்துடன் முடிவடைந்தபிறகு, மேலும் 6 மாதங்களுக்கு பழைய நிர்வாகிகளுக்கு பதவி நீட்டிப்பு செய்ய சங்க விதிகளில் இட மில்லை. 3 ஆண்டுகளுக்குமேல் எந்த சங்க நிர்வாகிகளும் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடி யாது என்பதை சமீபத்தில் இதே உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத் தியுள்ளது. இந்தச் சூழலில் அவர்கள் சங்க நிர்வாகிகளே இல்லை எனும்போது தேர்தலை நடத்துவதற்காக அவர்கள் கூட்டிய கூட்டமும் செல்லாது.

அதேபோல அவர்கள் நடத்திய தேர்தலும் சட்டப்படி செல்லாது. நடிகர் சங்கத்தின் தேர்தல் நடை முறைகளில் தமிழக அரசு எந்த விதத்திலும் தலையீடு செய்ய வில்லை. தனி அதிகாரியும் சட்டப் படியாகத்தான் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் தொடர் வாதத்துக்காக விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in