எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை: மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை: மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் தகுதியான எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் 12 வாரங்களில் மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர்கல்விக்காக மத்திய அரசின் உதவியுடன் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், கடந்த 2018-19 கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு இதுதொடர் பாக சுற்றறிக்கை பிறப்பித்தது.

இந்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்யக் கோரி தென்காசி யைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘கடந்த 2018 19 கல்வியாண்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மாணவர் கள் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள நிலை யில், அவர்களுக்கான கல்வி உதவித்தொகையை தர மறுப்பது சட்டவிரோதமானது. ஒடுக்கப் பட்ட மக்களின் உயர் கல்வி கனவுகளை தகர்க்கும் வகையில் இந்த உத்தரவுகள் உள்ளன. எனவே, அனைத்து எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிட வேண் டும்’ என மனுவில் கோரப்பட்டி ருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங் கிய அமர்வு, ‘‘தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து 12 வாரங் களில் தகுந்த உத்தரவை பிறப் பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in