Published : 16 Oct 2019 07:45 AM
Last Updated : 16 Oct 2019 07:45 AM

அண்ணாநகர் டவர் பார்க்கில் 31 ஆயிரம் சதுர அடியில் தனியார் கிளப் ஆக்கிரமித்து கட்டிய கட்டுமானங்களை அகற்ற வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சென்னை அண்ணாநகர் டவர் பார்க்கில் 31 ஆயிரம் சதுர அடியில் பூங்காவுக்காக ஒதுக்கப் பட்ட இடத்தில் தனியார் கிளப் ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டு மானங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான டவர் பார்க் பூங்கா உள்ளது. இந்த வளாகத்துக்குள் அண்ணாநகர் டவர்ஸ் கிளப் என்ற பெயரில் தனியார் கிளப்பும் இயங்கி வரு கிறது. இந்த கிளப் விடுத்த வேண்டுகோளை ஏற்று மாநக ராட்சி நிர்வாகம் கடந்த 1989-ம் ஆண்டு 5872 சதுரடி கொண்ட கலையரங்கை 3 ஆண்டு குத் தகை அடிப்படையில் ஒதுக்கி கொடுத்தது.

இந்நிலையில், பார்க் வளாகத் துக்குள் 55 ஆயிரம் சதுர அடியில் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், 31 ஆயிரம் சதுர அடியை கிளப் நிர்வாகம் ஆக்கிரமித்து கட்டுமானங்களை கட்டியது.

இதனால் மாநகராட்சி நிர்வா கம் இந்த கிளப்புடன் மேற் கொண்ட குத்தகை ஒப்பந்தத்தை நீட்டிக்காமல், கடந்த 2012-ம் ஆண்டு கிளப் நிர்வாகம் மேற் கொண்ட ஆக்கிரமிப்புக்களை அகற்றி அந்த இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டுமென நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து கிளப் நிர் வாகம் மாநகர உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால் அந்த இடம் மாநக ராட்சிக்கு சொந்தமானது என்ப தால், இடத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் என கிளப் நிர்வாகத்துக்கு உரிமையியல் நீதிமன்றமும் உத்தரவிட்டது.

அதையடுத்து, இதை எதிர்த்து கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப் பித்துள்ள உத்தரவில், ‘‘அண்ணா நகர் டவர் பார்க் வளாகத்தில் செயல்படும் தனியார் கிளப்பில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் உறுப்பினர்களாக இருந்து கொண்டு அனைத்து சட்ட விதி முறைகளையும் மீறி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து திட்ட அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டி யிருப்பது மனவேதனையளிக் கிறது.

எனவே, சட்டத்தைக் காக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் 31 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து கிளப் நிர்வாகம் கட்டியுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இடிக்க வேண்டும்’’ என உத்தரவிட் டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x