சமூக சேவைக்கு தபால்காரர்கள் சிறந்த முன்னுதாரணம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு

சர்வதேச அஞ்சல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டம் சார்பில் சிறந்த ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. விழாவில், தபால் துறையில் சிறப்பாக பணியாற்றிய சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவரின் தனி உதவியாளர் எம்.சாந்தி உள்ளிட்ட 8 பேருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டாக் சேவா விருது வழங்கினார். அருகில், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆர். ஆனந்த், அஞ்சல் துறை தலைவர் (அஞ்சல் மற்றும் வணிக வளர்ச்சி) சாருகேசி, தமிழ்நாடு அஞ்சல் வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் எம்.சம்பத், மத்திய மண்டல அஞசல் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன், மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் ஷீலி பர்மன், பொது மேலாளர் (அஞ்சல் கணக்கு மற்றும் நிதி) எம்.அனிதா ஆகியோர் உள்ளனர். படம்: பு.க.பிரவீன்

Updated on
1 min read

சென்னை 

சமூக சேவைக்கு சிறந்த முன்னு தாரணமாக தபால்காரர்கள் திகழ் கின்றனர் என்று ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் புகழாராம் சூட்டியுள்ளார்.

சர்வதேச அஞ்சல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அஞ்சல்துறை வட்டம் சார்பில் சிறந்த ஊழியர் களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை தி,நகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடை பெற்றது. தபால் துறையில் சிறப் பாக பணியாற்றிய 8 ஊழியர் களுக்கு 'டாக் சேவா விருது' மற்றும் தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வழங்கினார். மேலும், 50-வது ஆண்டு சர்வதேச அஞ்சல் தினத்தை முன்னிட்டு சிறப்பு தபால் உறையையும் அவர் வெளியிட்டார்.

விழாவில் ஆளுநர் பேசிய தாவது: நம் நாட்டில் 1947-ம் ஆண்டு 23 ஆயிரத்து 344 தபால் நிலை யங்கள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 1.6 லட்ச மாக உயர்ந்திருக்கிறது. கிராமப் புறங்களில் மிக முக்கிய இடத்தை தபால் நிலையங்கள் பெற்றுள்ளன. கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் தகவல் கொண்டு வரும் தூதுவனாக மட்டுமின்றி ஒரு உறவினராகவும், நல்ல நண்பராகவும் தபால்காரர்கள் மாறியுள்ளனர். தபால்காரரின் பணி சேவை மனப்பான்மை மிக்கது.

கிராமத்தில் முக்கியமான குடி மகனாகவே தபால்காரர் மாறி யுள்ளார். இப்படி குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறியுள்ள தபால் காரர்கள் சமூக சேவைக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

விழா முடிவில் செய்தியாளர் களிடம் தமிழ்நாடு அஞ்சல் வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் எம்.சம்பத் கூறும்போது, ‘‘தற்போது தனிநபர் கடித போக்குவரத்து குறைந்துவிட்டது. வணிக ரீதியான கடித போக்குவரத்து மட்டுமே அதிகரித்து இருக்கிறது. எனவே, வரும் நாட்களில் தனிநபர் கடித போக்குவரத்தை மீண்டும் உயர்த்த நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். பள்ளிக் குழந்தைகளிடம் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க உள்ளோம். இதற்காக தபால்துறை பல நிகழ்ச்சிகளை முன்னெடுக்க இருக்கிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in