மின்னணு வர்த்தகத்தில் தடம் பதிக்கும் கோவை ரயில்வே மெயில் சர்வீஸ்:  ‘ஆன்லைன் ஷாப்பிங்’ மூலமாக பொருட்களை விற்க திட்டம் 

எஸ்.கோபிநாதன்
எஸ்.கோபிநாதன்
Updated on
1 min read

த.சத்தியசீலன்

கோவை 

கோவை கோட்ட ரயில்வே மெயில் சர்வீஸ் மின்னணு வர்த்தகத்தில் தடம் பதிக்கிறது. ‘ஆன்லைன் ஷாப்பிங்’ மூலமாக பொருட்களை விற்க திட்டமிட்டுள்ளது.

இந்திய தபால் துறையின் ஓர் அங்கமாக செயல்பட்டுவரும், ‘ஆர்எம்எஸ்’ எனப்படும் ரயில்வே மெயில் சர்வீஸ் மூலமாக, சேமிப்பு கணக்கு, கடிதப் போக்கு வரத்து, பார்சல் சர்வீஸ், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன.

கோவை கோட்ட ரயில்வே மெயில் சர்வீஸ் அலுவலகத்தில் 24 மணி நேர சேவை அளிக்கப் படுகிறது. நாளொன்றுக்கு சராசரி யாக 3 ஆயிரம் பார்சல்களும், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் சுமார் 10,000 தபால்களும் கையா ளப்படுகின்றன.

தற்போது கோவை கோட்ட ஆர்எம்எஸ் அலுவலகம் ஃபிளிப் கார்ட், அமேஸான் போல ‘இ-காமர்ஸ்' எனப்படும் மின்னணு வர்த்தகத்தில் தடம் பதிக்கிறது. ஃபிளிப்கார்ட், அமேஸான் போன்ற வர்த்தக நிறுவனங்கள் ஆன் லைன் சந்தையை கைப்பற்றி, பொருட்களுக்கு மெகா தள்ளு படியை அளித்து நெட்டிசன்களை தன்வசப்படுத்தி வருகின்றன.

மின்னணு சாதனங்கள், ஆடை கள், காலணிகள், அலங்காரப் பொருட்கள், அழகு சாதனங்கள், செல்போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள், பர்னிச்சர் பொருட்கள் என வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஒரே கூரையின்கீழ் விற்கின்றன.

நேரடி சந்தையைக் காட்டிலும், ஆன்லைன் சந்தையில் பொருட் களுக்கு கணிசமாக தள்ளுபடி கிடைப்பதால், நெட்டிசன்களும் இந்நிறுவனங்களின் பொருட்களை நாடுகின்றனர். தங்களுக்கு ஒரு பொருள் தேவைப்படுகிறது என் றால் அது ஆன்லைனில் எவ் வளவு குறைந்த விலைக்கு கிடைக் கும் என்று பார்த்த பின்னரே, வாங்க முனைகின்றனர்.

பொருட்கள் தரமாக இருப்பதும், வாடிக்கையாளரின் வீட்டுக்கே கொண்டு வந்து பொருட்களைக் கொடுத்து விட்டு, ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் பணம் பெற் றுக்கொள்வதும் கூடுதல் வசதி. இந்நிறுவனங்களைப் போலவே ஆன்லைன் வர்த்தகத்தில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது கோவை கோட்ட ஆர்எம்எஸ்.

இதுகுறித்து ரெயில்வே மெயில் சர்வீஸ் கோவை கோட்ட அலு வலக கண்காணிப்பாளர் எஸ்.கோபிநாதன் கூறும்போது, ‘‘ரயில்வே மெயில் சர்வீஸ் கோவை கோட்ட அலுவலகம், மின்னணு வர்த்தகத்தில் நுழை கிறது. இதற்காக சங்கனூரில் ஆர்.எம்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பார்சல் அலுவலக பகுதியில், பிரத்யேக கட்டிடம் கட்டப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. ஆன்லைன் வர்த்தகத்துக்காக பிரத்யேக செயலி வடிவமைக்கப் பட உள்ளது. அதன்மூலமாக ‘ஆன்லைன் ஷாப்பிங்’ செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர் களின் தேவையைப் பூர்த்தி செய் யும் வகையில் ஒரு முழுமையான சேவை அளிக்கப்படும். மிக விரை வில் இச்சேவை அமலுக்கு வருகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in