Published : 17 Jul 2015 08:36 AM
Last Updated : 17 Jul 2015 08:36 AM

நெல்லை மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி சஸ்பெண்ட்: செய்தித்துறை அதிரடி

நெல்லை மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.ராஜா நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு பொறுப்பேற்றதும், சென்னை தலைமைச் செயலக மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டவர் ராஜா.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், திடீரென மாற்றப்பட்டு, நெல்லை மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டார்.

இந்நிலையில், நேற்று திடீரென அவரை சஸ்பெண்ட் செய்து செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த அர சாணை நேற்று வெளியிடப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

செய்தி மக்கள் தொடர்பு துறையில் இருந்து அயல்பணியில் நெல்லை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப் பட்ட ஏ.ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பொதுமக்கள் நலன் கருதி இதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

சஸ்பெண்ட் காலத்தில் அவர், நெல்லை மாநகராட்சியில் தங்கி யிருக்க வேண்டும்.

உயர் அதிகாரிகள் உத்தரவின்றி அவர் வேறு எங்கும் செல்லக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

காரணம் என்ன?

தலைமைச் செயலகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ராஜா, நெல்லை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவர் பலமுறை சென்னைக்கு வந்து மீண்டும் பழைய பதவியில் அமர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரித்தனர். தற்போது, நெல்லையில் அவர் பெரும்பாலும் இருப்பதில்லை என்றும், அவர் சென்னையிலேயே தங்கியிருப்பதாகவும் நெல்லை மாநகராட்சியில் இருந்து பல புகார்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு வந்ததால், அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x