டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க உத்தரவு

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க உத்தரவு
Updated on
1 min read

கோவை

டெங்கு காய்ச்சல் நோய் பரவலை தடுக்க, மாநகரில் தினசரி ‘‘காய்ச் சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்’’ நடத்த மாநகராட்சி மருத்துவர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி யுள்ளனர். களப்பணியில் மட்டும் 800 ஊழியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள், வீடு வீடாக கள ஆய்வு சென்று, டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுதல், தடுப்பு மருந்துகள் தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது,‘‘ மாநகரில் கடந்த சில வாரங்க ளாக தினசரி சராசரியாக 15 முதல் 20 பேர் காய்ச்சல் பாதிப்புக் குள்ளாகின்றனர். இதில், 10 சதவீதம் பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறி ஆகும். ரத்தத் தட்டணுக்கள் ரத்தம் உறைவதற்கு முக்கிய காரணி. டெங்கு வைரஸ் ரத்தத் தட்டணுக்களை அழித்துவிடும் தன்மையுடையது. தட்டணுக்கள் எண்ணிக்கை குறையும் போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும், பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக்கசிவை ஏற்படுத்தக்கூடும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன், மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெற வேண்டும். வீட்டை சுற்றிலும் காணப்படும் தேவையற்ற தண்ணீர் தேங்க பயன்படும் டயர், இளநீர் ஓடுகள், மூடி வைக்கப்படாத சிமென்ட் தொட்டிகள், ஆட்டு உரல்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

மாநகராட்சி சார்பில் 32 மருத்துவமனைகள் உள்ளன. ஆணையர் உத்தரவின்பேரில், இந்த மருத்துவமனைகள் மூலம் ‘‘காய்ச்சல் தடுப்பு சிறப்பு விழிப்புணர்வு முகாம்’’ தினசரி நடத்தப்படுகிறது. மருத்துவர், ஊழியர்கள், முகாம் நடக்கும் பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பர். காய்ச்சல் தீவிரமாக இருந்தால், மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை பெற பரிந்துரைப்பர். நிலவேம்பு குடிநீரையும் வழங்குவர். கொசு உற்பத்தியை தடுக்க விழிப்புணர்வும் ஏற்படுத்து வர்’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in