2020 ஜனவரியில் இறுதி பட்டியல் வெளியாகும்; வாக்காளர் சரிபார்த்தல் திட்டத்தை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

2020 ஜனவரியில் இறுதி பட்டியல் வெளியாகும்; வாக்காளர் சரிபார்த்தல் திட்டத்தை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்
Updated on
2 min read

சென்னை

தமிழகத்தில் வாக்காளர் சரிபார்த் தல் திட்டத்தை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக் கப்பட்டுள்ளதாகவும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத் தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் வாக்காளர் சரிபார்த்தல் திட்டம் அக்டோபர் 15-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் நவ.18-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் நவ.25-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தை விரைவுபடுத்தவும் அனைத்து வாக்காளர்களையும் சரிபார்ப் பதை உறுதிப்படுத்தவும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள் ளனர். தேர்தல் ஆணைய உத்தர வின்படி நியமிக்கப்பட்ட கண் காணிப்பு அதிகாரிகளின் ஆலோச னைக் கூட்டம் நேற்று தலைமைச் செயல கத்தில் சத்ய பிரத சாஹு தலைமையில் நடந்தது.

முன்னதாக அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர வுப்படி, வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 10 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் நியமிக் கப்பட்டுள்ளனர். அதன்படி, போக் குவரத்து ஆணையர் சி.சமய மூர்த்தி, பதிவுத்துறை ஐஜி பி.ஜோதி நிர்மலாசாமி, எல்காட் மேலாண் இயக்குநர் எம்.விஜய குமார், டிஎன்பிஎல் மேலாண் இயக்குநர் எஸ்.சிவசண்முக ராஜா, தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் ஆணையர் டி.பி.ராஜேஷ், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர் வி.சம்பத், கைத்தறி மற்றும் துணிநூல்துறை இயக்குநர் எம்.கருணாகரன், தமிழ்நாடு காதி மற்றும் கதர்கிராமத் தொழில்கள் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி என்.நடராஜன், தாட்கோ மேலாண் இயக்குநர் சஜன்சிங் பி.சவுஹான், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஏ.ஞானசேகரன் ஆகியோர் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் சரிபார்ப்பு திட்ட காலத்தில் இவர்கள் 3 அல்லது 4 மாவட்டங்களுக்கு குறைந்தபட்சம் 3 முறை நேரில் சென்று வாக்காளர் சரிபார்ப்பு திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைவு படுத்துவார்கள். மேலும், அவர்கள் சில வாக்குச்சாவடி மையங்களை பார்வையிடுவதுடன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட் டங்கள் நடத்தி, வாக்காளர் பட்டி யல் திருத்தம் தொடர்பான புகார் களை களைவார்கள். அதன்பின், அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்கள்.

தற்போதுள்ள 5 கோடியே 99 லட்சம் வாக்காளர்களில் ஒரு கோடியே 64 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் தங்கள் விவரங்களை சரிபார்த்துள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் தொடர்ந்து அனைத்து வாக் காளர்களும் இந்த சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக வும் இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

நவம்பர் 18-ம் தேதி வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் முடிக்கப்பட்டு, அதன்பின் நவ.25-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் படும். அதைத் தொடர்ந்து, பெயர் சேர்த்தல், நீக்கல், தொகுதிக்குள் முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்டவை தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்தாண்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் படும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in