அமெரிக்காவில் பெரியாரின் 141-வது பிறந்த நாள் விழா: தி.க. தலைவர் கி.வீரமணி பங்கேற்பு

அமெரிக்காவில் பெரியாரின் 141-வது பிறந்த நாள் விழா: தி.க. தலைவர் கி.வீரமணி பங்கேற்பு
Updated on
1 min read

சென்னை

அமெரிக்காவின் கலிபோர்னியா வில் நடந்த பெரியாரின் 141-வது பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார்.

இதுகுறித்து திராவிடர் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வட அமெரிக்காவின் கலி போர்னியா மாநிலத்தில் பெரியாரின் 141-ம் ஆண்டு பிறந்த நாள் விழா, கடந்த சனிக்கிழமை நடந்தது. கலிபோர்னியா மாநில பெரியார் பன்னாட்டு அமைப்பு, சீக்கிய தகவல் மையம், இந் திய சிறுபான்மையினர் சங்கம் ஆகியவை ஏற்பாடு செய் திருந்த இந்த விழாவில், திராவி டர் கழகத் தலைவர் கி.வீர மணி கலந்துகொண்டு, ‘ஒடுக்கு முறைக்கு எதிராக தந்தை பெரியாரின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது, அமெரிக்காவில் இயங்கும் இந்திய சிறுபான்மையினர் சங் கத்தின் சார்பில், ‘எளிய மனத் தினரைக் கவர்தல் - இந்திய துணைக் கண்டத்தில் மனித மாண்புக்கான போராட்டம்’ என்ற நூலை கி.வீரமணி வெளியிட்டார்.

முன்னதாக, அமிர்த சுபா வரவேற்றார். திராவிடர் கழக வெளி யுறவுச் செயலாளர் கோ.கரு ணாநிதி அறிமுக உரையாற்றினார். விழா நிகழ்ச்சிகளை சுகந்தி தொகுத்து வழங்கினார். நிறை வில், கார்க்கி குமரேசன் நன்றி கூறினார்.

பெரியார் மணியம்மை பல் கலைக்கழக முன்னாள் மாணவி கள், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தமிழர்கள், சீக்கியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in