அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி மற்றும் அவரோடு விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளவர் களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: சர்வதேச அளவில் வறுமையை ஒழிப் பதற்கான பொருளாதார திட்டங்களை கண்டறிந்தமைக்காக நோபல் பரிசு பெறும் மூவரில் இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜியும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அபிஜித் பானர்ஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜிக்கும், அவரோடு விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் களுக்கும் எனது வாழ்த்துகள்.

கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் முக்கிய முடிவுகள் எடுக்க, இவர்களது பணி உதவிகரமாக இருந்தது இதுபோன்ற முன்னோடியான பணிகள், எதிர்வரும் காலங் களில் வறுமையை ஒழிக்க உதவும் என நான் நம்புகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in