Published : 08 Jul 2015 07:38 AM
Last Updated : 08 Jul 2015 07:38 AM

மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி நூற்றாண்டு விழா: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

தமிழக பெண்களின் முன்னேற்றத் துக்கு மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன என்று மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னையின் முதல் தனியார் பெண்கள் கல்லூரியான மகளிர் கிறித்துவக் கல்லூரி, 1915-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி நிறுவப்பட்டது. அந்தக் கல்லூரியின் நூற்றாண்டு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழக பெண்களுக்கு பல அம்சங்களில் சாதகமான சூழல் இருந்திருக்கிறது. இதற்கு மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி போன்ற நிறுவனங்களே காரணம். கடந்த நூறாண்டு காலத்தில் பல துறை களில் இந்தியாவின் முன்னணி பெண்களை இந்தக் கல்லூரி உருவாக்கி இருக்கிறது.

இருபாலின கல்லூரியாக இல்லாததால் இங்கு நாம் எதையும் இழந்து விடவில்லை. மாணவிகள், தங்களுக்கு அளவுகோல்களை வைத்துக்கொண்டு சாதித்து வருகின்றனர். ஒரு நபரை நல்ல மனிதராக உருவாக்கும் பணியை இந்தக் கல்லூரி சிறப்பாக செய்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.விழாவில் சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ஆர்.தாண் டவன், கல்லூரியின் முன்னாள் மாணவிகளான தேசிய போலீஸ் அகாடமி இயக்குநர் அருணா பஹுகுணா, இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றும் ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஏஞ்சலின் பிரேமலதா, டாபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா னிவாசன், அமெரிக்க தொழில்துறை கல்லூரியின் முதல் இந்திய தலைவரான ஸ்ரீலதா சாஹீர் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x