

பட்டாபிராமில் குடும்ப வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் சத்திரம் பகுதியில் உள்ள பாரதியார் தெருவில் வசித்து வந்தவர் தேவராஜ். கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஜெகதீஷ் என்ற 8 வயது மகன் இருந்தான். தேவராஜுக்கு சரியான வேலை இல்லாததால் குடும்பம் நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.
வாடகை வீட்டில் வசித்து வந்ததால் வீட்டு வாடகை செலுத்த முடியாமல், குடும்ப செல வுக்கே பணம் இல்லாமல் தவித்து வந்தார். இதுகுறித்து தனது மனைவியிடம் சொல்லி வேதனைப்பட்ட தேவராஜ் கடும் மன உளைச்ச லில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை 10 மணி வரை தேவராஜ் வீடு திறக்கப்படவில்லை. அச்சமயம் அவரது அண்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது தேவராஜ், சங்கீதா, சிறுவன் ஜெகதீஷ் ஆகிய மூவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந் தார். தகவலறிந்து விரைந்து வந்த பட்டாபிராம் போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையின் போது கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ‘விதியின் விளையாட்டால் எங்களால் வாழ முடியவில்லை. நானும், என் மனைவியும் எடுத்த முடிவு தான் இது. எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் அல்ல’ என்று எழுதப்பட்டு இருந்தது.
வறுமை காரணமாக தேவராஜ் தம்பதி யினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டி ருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.