Published : 14 Oct 2019 10:35 AM
Last Updated : 14 Oct 2019 10:35 AM

தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் எதிரொலியாக இன்று முதல் பல்வேறு ரயில் போக்குவரத்தில் மாற்றம்

திருநெல்வேலி

மதுரை ரயில் நிலையத்தில் ரயில்பாதை தொகுப்பில் சில மாற்றங்கள் நடைபெற இருப்பதால் இன்று முதல் ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியிலிருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய (எண் 56727) திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் வரும் 16 மற்றும் 21-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இதற்கு மாற்றாக திருநெல்வேலியிலிருந்து இரவு 11.45 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் புறப்பட்டு செங்கோட்டைக்கு மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு சென்றடையும். திருநெல்வேலி - தாம்பரம் விரைவு ரயில் (எண் 06002) வரும் 20-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்தாகும் ரயில்கள்

நாகர்கோவிலில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயில் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. கோவையிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை- நாகர்கோவில் பயணிகள் ரயில் திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி இடையே இன்று முதல் 22-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் விருதுநகர் மற்றும் மதுரை இடையே இன்று முதல் 22-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மதுரையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் இன்று முதல் 22-ம் தேதி வரை மதுரை மற்றும் விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு ரயில்கள்

இதுபோல் காலை 7.20 மணி மற்றும் 11.15 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில்கள் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மதுரை மற்றும் விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டையிலிருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையும், பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய மற்றொரு ரயில் வரும் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையும் விருதுநகர் மற்றும் மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காட்டிலிருந்து காலை 4.10 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று முதல் 22-ம் தேதி வரை திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி இடையேயும், வரும் 22-ம் தேதி கூடல் நகர் மற்றும் திருநெல்வேலி இடையேயும், 23-ம் தேதி பாலக்காடு மற்றும் திருநெல்வேலி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூரிலிருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி - பாலக்காடு பயணிகள் ரயில் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை (15,18-ம் தேதி நீங்கலாக) திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் இடையேயும், 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை திருநெல்வேலி மற்றும் மதுரை இடையேயும், 22-ம் தேதி திருநெல்வேலி மற்றும் பாலக்காடு இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.

புனலூரிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை பயணிகள் ரயில் 20 மற்றும் 21-ம் தேதிகளில் திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. மதுரையிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் பயணிகள் ரயில் 21 மற்றும் 22-ம் தேதிகளில் மதுரை மற்றும் திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.

ஈரோட்டிலிருந்து முற்பகல் 12.35 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில் மற்றும் திருநெல்வேலியிலிருந்து காலை 5.05 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் 21 மற்றும் 22-ம் தேதிகளில் விருதுநகர் மற்றும் ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய (எண் 16191) தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் 20 மற்றும் 21-ம் தேதிகளில் திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்- தாம்பரம் அந்த்யோதயா விரைவு ரயில் 20 மற்றும் 21 தேதிகளில் நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. தாதர் - திருநெல்வேலி விரைவு ரயில் (எண் 11021) வரும் 19-ம் தேதி திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில் (எண் 11022) 21-ம் தேதி திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மாற்றுப்பாதையில் இயக்கம்

மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில் (எண் 16339) வரும் 20-ம் தேதி கரூர், திருச்சி காரைக்குடி, மானாமதுரை வழியாகவும், நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில் (எண் 16340) வரும் 21, 22-ம் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை காரைக்குடி, திருச்சி கரூர் வழியாகவும், குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (எண் 16128) வரும் 20, 21-ம் தேதிகளிலும், நாகர்கோவில் - கச்சேகுடா விரைவு ரயில் (எண் 16354) வரும் 22-ம் தேதியும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாகவும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x