Published : 14 Oct 2019 10:12 AM
Last Updated : 14 Oct 2019 10:12 AM

‘மண்ணின் மைந்தன்’ பிரச்சாரம் அதிமுகவுக்கு கைகொடுக்குமா? - காங். தலைவர்கள் பதிலடியால் அனல் பறக்கும் தேர்தல் களம்

அ. அருள்தாசன்

திருநெல்வேலி

நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக தரப்பில் மண்ணின் மைந்தனை வேட்பாள ராக நிறுத்தியிருப்பதாக கூறி அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இதற்கு பதிலடி தரும் விதத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் சிறப்புகளை அக்கட்சியினர் பட்டியலிட்டு ஆதரவு திரட்டுகின்றனர். இதனால் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

இத்தொகுதியில் 1977, 1980, 1984 தேர்தல்களில் வெற்றிபெற்ற ஜனதா மற்றும் அதிமுக கட்சி வேட்பாளரான ஜான்வின்சென்ட் இத்தொகுதிக்கு உட்பட்ட மருத குளத்தை சேர்ந்தவர். அடுத்து 1989-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆச்சியூர் மணியும் உள்ளூர்காரர் தான். ஆனால் 1991-ல் அதிமுக வேட் பாளராக வெற்றிபெற்று அமைச்ச ரான நடேசன் பால்ராஜ் தூத்துக் குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.

1996, 2001 தேர்தல்களில் வெற்றி பெற்ற எஸ்.வி. கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்ட்), மாணிக்க ராஜ் (அதிமுக) ஆகியோரும் உள்ளூர்காரர்கள். இதை தொடர்ந்து 2006, 2016-ல் வெற்றி பெற்ற எச். வசந்தகுமார், 2011-ல் வெற்றிபெற்ற எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் வெளியூர் காரர்கள்.

தற்போது அதிமுக வேட்பாள ராக போட்டியிடும் வெ.நாராய ணன் உள்ளூர் வேட்பாளர். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரன் வெளியூர்காரர். இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விவகாரம் காரசாரமாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவின் சுவர் விளம் பரங்களில் மண்ணின் மைந்தன் என்ற முத்திரையுடன் வேட்பாள ரின் பெயரையும், சின்னத்தையும் வரைந்திருப்பதை தொகுதி முழுக்க காணமுடிகிறது. நாங்கு நேரி டோல்கேட் அருகே அமைக் கப்பட்டுள்ள தலைமை தேர்தல் அலுவலகத்திலும் உள்ளூர் வேட்பாளரை நிறுத்தியிருப்பதை நினைவுபடுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தொகுதியில் முகாமிட் டுள்ள 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் அதிமுக வேட்பாளரை உள்ளூரிலிருந்து நிறுத்தியிருப்பதால் மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பார் என்று குறிப்பிட்டு வாக்கு சேகரிக்கிறார்கள்.

காங்கிரஸ் தரப்பில் வெளியூரி லிருந்து வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளதாக தமிழக முதல்வர் நேற்றைய பிரச்சாரத்தில் விமர்சனம் செய்தார். இந்த யுக்தி தங்களது வெற்றி வாய்ப்புக்கு உதவும் என்று அதிமுகவினர் நம்புகின்றனர்.

காங்கிரஸ் தரப்பில் இதற்கு பதில் தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்கிறது வசந்தகுமார் வழியில் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவரும், மக்களுக்காக உழைக்கும் நபரை தங்கள் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக கூறி காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு திரட்டுகின்றனர். இத்தொகுதியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் ‘ காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 15 ஆண்டு காலம் ராணுவத்தில் பணிபுரிந்த கட்டுக்கோப்புக்கு சொந்தக்காரர். ஏழை, எளியோருக்கு தொடர்ந்து உதவிகளை செய்துவருபவர்’’ என்று குறிப்பிட்டு ஆதரவு திரட்டினர்.

அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போட்டி பிரச்சாரம் செய்வதால் நாங்குநேரி தொகுதி தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x