Published : 14 Oct 2019 09:58 AM
Last Updated : 14 Oct 2019 09:58 AM

மாநகராட்சி சார்பில் கோவையில் பிரத்யேகமாக ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைப்பதில் தாமதம்

டி.ஜி.ரகுபதி

கோவை 

கோவையில் ஹாக்கி விளையாட் டுக்கு என பிரத்யேக மைதானத்தை விரைவில் அமைக்க மாநகராட் சிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டின், தேசிய விளையாட் டான ஹாக்கிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழகத்திலும் ஹாக்கி விளையாட்டு சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் சார்பில் ஹாக்கி தொடர்கள் நடத்தப்படுகின்றன. கோவையில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும், 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் ஹாக்கி விளையாட்டுக்கு தனி அணிகளே உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். கோவை மாவட்ட ஹாக்கி சங்கத் தால் மாவட்ட அளவில், மாநில, தேசிய போட்டிகளுக்கு தகுதி பெறும் வகையில் ஒரு சீசனுக்கு சராசரியாக 38 ஹாக்கி தொடர்கள் கோவையில் நடத்தப்படுகின்றன. இருப்பினும் ஹாக்கிக்கு கோவையில் பிரத்யேக அரசு மைதானம் இல்லை.

இது தொடர்பாக ஹாக்கி விளை யாட்டு வீரர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கோவையில் தனியார் கல்வி நிலையங்களில் தான் ஹாக்கி மைதானம் உள்ளது. அரசு சார்பில் ஹாக்கி மைதானம் அமைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது. அவர்களும் அமைக்க முயற்சித்து இடம் தேடி னர். மாநகராட்சியால் உரிய இடம் ஒதுக்கப்படாததால் சில ஆண்டு களுக்கு முன்னர், கோவைக்கு ஒதுக்கப்பட்ட ஹாக்கி மைதான திட்டம், வேறு மாவட்டத்துக்கு சென்று விட்டது. ஹாக்கி மைதானம் அமைக்க இடம் ஒதுக்க 2013-ல் அப்போதைய கோவை மாநக ராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத் தினோம். ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி இருபாலர் பள்ளியில் இடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப் பட்டது. தற்போது வரை இழுபறி தொடர்கிறது. பிரத்யேக மைதானம் இல்லாததால் பயிற்சி எடுப்பதில் சிரமங்கள் உள்ளன’’ என்றனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் செந்தில் ராஜ்குமார் கூறும் போது, ‘‘கோவையில் ஹாக்கியை தவிர, பிற விளையாட்டுகளுக்கு பிரத்யேக அரசு மைதானம் உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் மைதானம் தந்தால் தான், மாவட்ட ஹாக்கி சங்கத்தால் லீக் போட்டிகளே நடத்தும் சூழல் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் புல்தரையால் (டர்ப் பிச்) ஆன ஹாக்கி மைதானம் உள்ளது. மாநில அளவிலான, தேசிய அளவிலான போட்டிகளும் புல்தரையில்தான் நடத்தப்படுகின் றன. ஆனால், கோவையில் புல்தரை மைதானம் இல்லாததால் மண் தளத்தில் தான் வீரர், வீராங்கனைகள் பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது. மண் தளத்தில் ஆடிவிட்டு, திடீரென புல்தரையில் ஆடும்போது வீரர்கள் அடையும் சிரமங்கள் ஏராளம். இதை சமாளிக்க மாநில அளவிலான போட்டிகள் நடக்கும் சமயத்தில், அங்குள்ள புல்தரை மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று சில நாட்கள் கோவை அணிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவையில் புல்தரையினால் ஆன ஹாக்கி மைதானம் அமைத்து தர மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகள் கூறும்போது,‘‘ 24-வது வார்டு ஆரோக்கியசாமி சாலையி லுள்ள மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சர்வதேச தரத்திலான, ஹாக்கி மைதானம் அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. முதலில் ரூ.2.25 கோடி மதிப்பில் 100 மீட்டர் நீளம், 55 மீட்டர் அகலத் தில் அமைக்க திட்டமிடப்பட்டது. பின்னர், திட்ட மதிப்பீடு மாறியது. 2016-ம் ஆண்டு பணிகள் தொடங் கின. மைதானம் அமைக்க உள்ள பகுதி சீரமைக்கப்பட்டு, அதன் மீது சிமென்ட் தளம் போட்டு, சிறிய புள்ளி வடிவில் உள்ள கருப்பு ரப்பர் துகள்கள் தூவப்பட்டன. இதன் மீது சிந்தடிக் தளம் அமைக்கும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டு, நிதிப்பற்றாக்குறையால் நிறுத்தப் பட்டது’’ என்றனர்.

ரூ.19 கோடி ஒதுக்கீடு

மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும் போது, ‘‘ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ.24 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது. தற் போது வரை ரூ.5 கோடிக்கு பணிகள் முடிந்துள்ளன. மீதம் ரூ.19 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளன. ஸ்மார்ட்சிட்டி திட்டத் தில் இருந்து ரூ.19 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையில் சிறிய மாற்றங்கள் செய்து, தகுந்த ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்து ஹாக்கி மைதானம் அமைக் கும் பணி விரைவில் தொடங்கி முடிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x