Published : 14 Oct 2019 09:40 AM
Last Updated : 14 Oct 2019 09:40 AM

10 ஆண்டுகளில் 150 கிலோ தங்க நகை கொள்ளை: கேள்விக்குறியாகும் தமிழக போலீஸாரின் நடவடிக்கை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

இந்தியாவில் தங்க நகை மொத்த வியாபாரிகளின் முக்கிய சந்தைக ளாக கோவை, மும்பை, கொல் கத்தா நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களில் இருந்து வியாபாரத் துக்காக ஆந்திரா, கர்நாடகாவுக்கு நகைகளுடன் வியாபாரிகள் பயணம் செய்கிறார்கள். பேருந்து பயணத்தில் வியாபாரிகள் தூங் கும்போது பின்இருக்கை வழியாக பெட்டி, தோல் பைகளை அறுத்து நகைகள் திருடப்படுகின்றன.

உத்தர பிரதேசத்தின் புலந்த் ஷெஹர், அலிகர், மீரட், பிஜ்னோர், சஹரன்பூர், பரேலி, அம்ரோஹா பகுதிகளை சேர்ந்த கொள்ளை யர்களே, நகைக் கொள்ளைகளில் அதிகம் ஈடுபடுகின்றனர். இந்த கொள்ளையர்களிடம் கோவை, சென்னை உள்ளிட்ட தென்னிந்திய வியாபாரிகள் கடந்த 10 ஆண்டு களில் சுமார் 150 கிலோ தங்க நகைகளை பறி கொடுத்துள்ளனர். இதன் ரொக்க மதிப்பு ரூ. 50 கோடியாகும். நகைகளை பறி கொடுத்தவர்கள் வழக்குகளை பதிவு செய்யவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளதாக கோவை வியாபாரிகள் கூறுகின்றனர்.

கோவை, சென்னையில் இது வரை 6 நகைக் கொள்ளை வழக்கு கள் மட்டுமே பதிவு செய்யப்பட் டுள்ளன. சென்னை கோயம்பேட் டில் கடந்த 2015-ல், 3.1 கிலோ நகை கொள்ளை வழக்கு பதிவாகி உள்ளது. இதில், உத்தர பிரதேச கொள்ளையர்கள் கைது செய்யப் பட்டனர். மதுரை நகர போலீஸ் நிலையத்தில் 2010-ல் 4.884 கிலோ தங்க நகை கொள்ளை வழக்கு பதிவானது. கோவையின் பி-1 போலீஸ் நிலையத்தில் 2013-ல் 2.5 கிலோ, சாய்பாபா காலனியில் 2017-ல் 2 கிலோ, ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் 2017-ல் 2.5 கிலோ, 2019-ல் 1.3 கிலோ நகை கொள்ளை என 4 வழக்குகள் பதிவாகி உள்ளன.

கோவையில் கடைசியாக நடந்த கொள்ளையில், தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலையீட்டால் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் 3 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவானது. இதில், நகையை பறிகொடுத்த தர்மா ஜுவல்லர்ஸ் உரிமையாளரான பி.முரளி நரசிம்மன், சக வியாபாரியான தியாகராஜன் உதவியுடன் உத்தர பிரதேசம் வந்தார். தமிழக போலீ ஸார் உதவியே இல்லாமல் கொள் ளையர்கள் கைது செய்யப்பட்டு நகைகளும் முதன்முறையாக முழுவதும் மீட்கப்பட்டிருக்கிறது. இதற்காக உத்தர பிரதேசத்தின் முராதாபாத்தில் பி.ஏ.சி. சிறப்பு படையின் தலைமை கமாண்டராக இருக்கும் ஜி.முனிராஜ் உதவியுள் ளார். தமிழரான இவர் தர்மபுரி அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர்.

நகைக் கொள்ளை வழக்குகளில் ஆந்திரா, தெலுங்கானா அளவுக்கு தமிழக போலீஸாரின் நடவடிக்கை இல்லை எனக் கருதப்படுகிறது. ஜாமீனில் வெளியான கொள்ளை யர்களை கண்காணிக்கும் வழக்க மும் தமிழக போலீஸாரிடம் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது.

தமிழகத்தை குறிவைத்து கொள்ளையடிப்பதை தடுக்க சில தடுப்பு நடவடிக்கைகள் அவசிய மாகிறது. குறிப்பாக ஆம்னி பேருந்தில் ‘ஓபன் டிக்கெட்’ முறை யால் அடையாளத்தை மறைத்து யார் வேண்டுமானாலும் பயணம் செய்யும் நிலை உள்ளது. இந்த முறையில் பயணச்சீட்டு எடுப்பதும், ஓட்டல்களில் அறை எடுத்து தங்குவதும் தடுக்கப்பட வேண்டும்.

தமிழக போலீஸார் உடனடியாக வழக்குகளை பதிவு செய்ய வேண் டும். உ.பி.யில் 7 ஐ.பி.எஸ், 17 ஐஏஎஸ் அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர் களிடம் நெருக்கமான தொடர்பை வளர்த்து முழுப்பலனையும் பெற வேண்டும் என்பதே கோவை மொத்த நகை வியாபாரிகளின் ஆதங்கமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x