Published : 14 Oct 2019 09:28 AM
Last Updated : 14 Oct 2019 09:28 AM

இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை: நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி வாக்குறுதி

திருநெல்வேலி

இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை, அனைத்து வகை யான தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று நாங்குநேரி தொகுதியில் பிரச் சாரம் செய்த முதல்வர் பழனிசாமி உறுதி அளித்தார்.

நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.நாராயணனை ஆதரித்து ரெட்டியார்பட்டியில் முதல்வர் பேசியதாவது:

பொங்கல் பண்டிகையின்போது அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கினோம். தமிழகம் முழுவதும் முதியோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வரப் பெற்றுள்ளது. அதன்படி 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும். ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு தலா 2 ஆயிரம் பேருக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். இதுபோல் விவசாய தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்து வகையான தொழிலாளர் களுக்கும்

ரூ.2 ஆயிரம் வழங்க கணக் கெடுப்பு நடைபெற்று வருகிறது. இத்தொகையும் விரைவில் வழங்கப்படும்.

தமிழகத்தில் தொழில் தொடங்க ஏற்ற சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி தருகிறது. தமிழகத்தில் தொழில்கள் தொடங்க ரூ.3.34 லட்சம் கோடிக்கு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

இதை பொறுத்துக்கொள்ள முடி யாமல் திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார். நானும், அமைச்சர்களும் வெளிநாடு களுக்கு சென்றது குறித்து அவர் கேள்வி எழுப்புகிறார்.

லண்டனுக்கு 4 மாதத்துக்கு ஒருமுறை ஸ்டாலின் செல்வதின் மர்மம் என்ன? மத்திய அரசிடம் சுவிஸ் வங்கி அளித்துள்ள பட்டிய லில் திமுகவினர் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வந்துள் ளது.

எந்த குற்றச்சாட்டையும் சொல்ல முடியாத அளவுக்கு அதிமுக ஆட்சி நடைபெற்று வருகி றது. ஆனால், ஊழல் நடப்பதாக திமுக தவறான பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகிறது. ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் திமுகவுக்கு அதிமுகவை விமர்சிக்க தகுதி கிடையாது.

புதிய தலைமை செயலகம் அமைத்தது தொடர்பான ஊழல் புகார் ஸ்டாலின் மீது உள்ளது. அந்த புகார் விரைவில் விசாரிக்கப்படும். ஊழலுக்காக கனிமொழி திஹார் சிறைக்கு சென்றார். ப.சிதம்பரம் ஊழல் செய்து சிறையில் இருக்கி றார். இவர்களுக்கு ஊழலை பற்றி பேச தகுதியில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x