Published : 14 Oct 2019 10:24 AM
Last Updated : 14 Oct 2019 10:24 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முதல்வர் சுற்றுப்பயணத்தில் மாற்றம்: அதிமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு

சென்னை

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் முதல்வர் பழனி சாமியின் பிரச்சார சுற்றுப்பயணத் தில் மாற்றம் செயயப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடக்கிறது. இதை யொட்டி அதிமுக இணை ஒருங் கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி பிரச்சாரம் மேற் கொண்டுள்ளார். தற்போது அவரது பிரச்சார பயணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ரெட்டியார்பட்டி வி.நாராயணனை ஆதரித்து அக்.14-ம் தேதி பிற்பகல் 3 முதல் 4 மணி வரை ஏர்வாடி பேரூராட்சி, 4 முதல் 5 வரை திருக்குறுங்குடி பேரூராட்சி, 5 முதல் 6 வரை மாவடி, மாலை 6 முதல் இரவு 7 வரை களக்காடு பேரூராட்சி, 7 முதல் 8 மணி வரை சிங்கிகுளம் ஆகிய இடங்களில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.

அதே தொகுதியில் அக்.18-ம் தேதி பிற்பகல் 3 முதல் 4 மணி வரை முன்னீர்பள்ளம், 4 முதல் 5 வரை கிருஷ்ணாபுரம், 5 முதல் 6 வரை கே.டி.சி.நகர், 6 முதல் இரவு 7 வரை சீவலப்பேரி ஆகிய இடங்களில் முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து அக்.16-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3.30 வரை காணை, 3.30 முதல் 5 வரை மாம்பழப்பட்டு, 5 முதல் 6.30 வரை அரியலூர் திருக்கை, இரவு 6.30 முதல் 8 வரை கெடார், 8 முதல் 9 வரை சூரப்பட்டு, இரவு 9 முதல் 10 மணி வரை திருவாமாத்தூர் ஆகிய இடங்களில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.

மறுநாள் (அக்.17) பகல் 1முதல் 3 மணி வரை விராட்டிக்குப்பம், 3 முதல் 4.30 வரை தும்பூர், 4.30 முதல் 6 வரை முட்டத்தூர், மாலை 6 முதல் இரவு 7.30 வரை பனமலை, 7.30 முதல் 9 வரை அன்னியூர், 9 முதல் 10 மணி வரை கடையம் ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்கிறார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x