Published : 14 Oct 2019 08:50 AM
Last Updated : 14 Oct 2019 08:50 AM

தேர்ந்தெடுக்கப்பட்ட பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதை ஊக்குவிக்க புதிய திட்டம்: மாசு பாதிப்பை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை

ச.கார்த்திகேயன்

சென்னை

நகர்ப்புறங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது உரு வாகும் காற்று மாசுவால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பொது இடங்களில் மக்கள் பட்டாசு வெடிப் பதை ஊக்குவிக்க மாசு கட்டுப் பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் அன்றாடம் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகளில் இருந்து வெளி யேறும் புகை, சாலையை முறையாக பராமரிக்காதது போன்ற வற்றால் காற்று மாசு ஏற்படுகிறது.

நச்சுத்தன்மை வாய்ந்த துகள்கள்

ஆனால் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசானது, மேற்கூறிய முறை களில் ஏற்படும் காற்று மாசின் அளவை விட அதிகமாக உள் ளது. பட்டாசு புகையானது அபாய கரமான பல்வேறு நச்சுத்தன்மை வாய்ந்த துகள்கள் அடங்கியதாக உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளி அன்று சென்னை சவுக்கார் பேட்டையில் காற்று மாசின் அளவு 777 மைக்ரோ கிராமாக இருந்தது.

6 மடங்கு மாசு அதிகரிப்பு

காற்றில் மிதக்கும் 10 மைக்ரானுக் கும் குறைவான அளவுள்ள நுண் ணிய துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு உள்ளது என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப்படுகிறது. 10 மைக் ரான் அளவுள்ள துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் 100 மைக்ரோ கிராம் வரை இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவாக உள்ளது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட அளவை விட 6 மடங்கு மாசு அதிகரித் திருந்தது.

சுகாதார சீர்கேடு

இதனால் தீபாவளி அன்று காற்று மாசு கணக்கிடப்பட்ட நகரங் களில் சென்னை, தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. பொதுமக்க ளுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இதற்கிடையே, நகர்ப்புறங்களில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்த, குறிப்பிட்ட பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதை ஊக்குவிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத் தில் தீபாவளி அன்று காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும் இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. வசிப் பிடங்களில் குழந்தைகள் மற்றும் இதயநோயாளிகள், முதியோர், சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட் டவர்கள் உள்ளனர். இவர்களுக்கும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கும் வெடிச்சத்தம், புகை ஆகாது.

இதை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்களில் காற்று மாசுவால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வும் வீடுகளில் தனித்தனியாக பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, பொதுமக்கள் ஆதரவுடன், அந் தந்த பகுதியில் தேர்ந்தெடுக் கப்பட்ட பொது இடங்களில் பட் டாசு வெடிக்கவும் அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இதற்காக ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது.

இதைத் தொடர்ந்து, தேர்ந் தெடுக்கப்பட்ட பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதை ஊக்குவிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் களுக்கு விரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளன.

இவ்வாறு வாரிய அதிகாரி கள் கூறினர்.உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x