Published : 14 Oct 2019 08:45 AM
Last Updated : 14 Oct 2019 08:45 AM

ராஜிவ்காந்தி படுகொலையை ஆதரித்து பேசிய சீமானுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்

சென்னை

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைதேர்தல் பிரச்சாரக் கூட்டத் தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் படு கொலையை நியாயப்படுத்தியும் அதை செய்தவர்களை வரலாறு நிச்சயம் போற்றிப் பாராட்டும் என்றும் பயங்கரவாத வன்முறை செயலை பகிரங்கமாக ஆதரித்து பேசியிருக்கிறார்.

இப்பேச்சின் மூலம் இந்தியா வில் தடை செய்யபட்ட பயங்க ரவாத இயக்கமான விடுதலை புலி களின் சட்டவிரோத நடவடிக்கை களை ஆதரித்து தேசத்துரோக குற்றத்தை சீமான் செய்திருக் கிறார். சீமானின் கீழ்த்தரமான அநாகரிக ஆணவ பேச்சை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார் பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கபட்டு தமிழர் தாயக பகுதி, வரதராஜ பெருமாள் தலை மையில் தமிழர் ஆட்சி என பல் வேறு உரிமைகளை பெற்று தந்தவர் ராஜிவ்காந்தி.

இலங்கை தமிழர்களை பாது காக்க இந்திய அமைதிகாக்கும் படையை அனுப்பியவர் ராஜிவ் காந்தி. இலங்கை தமிழர்களுக்கு பாதுக்காப்பு வழங்கிய இந்திய அமைதி காக்கும் படையை சேர்ந்த 2 ஆயிரம் இந்திய வீரர் களை இலங்கை மண்ணில் கோழைத்தனமாக கொன்று குவித் தவர்கள் விடுதலைப் புலிகள். இவர்களின் துரோகத்தை மறைக் கும் சீமானை விட தேசத்துரோகி எவரும் இருக்க முடியாது.

பிரபாகரனின் சதி திட்டத்தால் பலியாக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உயிர்தியாகத்தை பகிரங்கமாக கொச்சைபடுத்தும் சீமானை தமி ழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

சீமானை தலைவராக கொண்ட நாம் தமிழர் கட்சிக்கான அங்கீ காரத்தை இந்திய தேர்தல் ஆணை யம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக, காவல் துறையிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரி விக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x