Published : 14 Oct 2019 08:12 AM
Last Updated : 14 Oct 2019 08:12 AM

சம்ஸ்கிருதம், இந்தி போல மூத்த மொழியான தமிழுக்கும் முன்னுரிமை தரவேண்டும்: மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

சென்னை

சம்ஸ்கிருதம், இந்திக்கு காட்டப் படும் முன்னுரிமையை மூத்த மொழியான தமிழுக்கும் மத்திய அரசு வழங்கவேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10-வது பதிப்பு சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. நூலை அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் வெளியிட, பாடகி பி.சுசீலா பெற்றுக்கொண்டார்.

வைரமுத்து தனது ஏற்புரையில் கூறியதாவது:

வாசிக்கும் பழக்கம்

வாசிக்கும் பழக்கம் மறைந்துகொண்டிருப்பதாக யாரும் வருந்தவேண்டாம். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் வழக்கம் தொடங்கி உள்ளது. இல்லாவிட்டால், ‘தமி ழாற்றுப்படை’ 90 நாட்களில் 10 பதிப்பு கண்டிருக்க முடியாது.

தமிழ் பெருமையுறுவதுபோல ஒரு தோற்றம் தெரிகிறது. அது மாயமான் தோற்றம்போல மறைந் துவிடக்கூடாது. உலக மொழிகளில் 18-வது இடத்திலும், இந்திய மொழிகளில் 5-வது இடத்திலும் தமிழ் திகழ்கிறது.

தொன்மை, இலக்கியம், வரலாறு, பண்பாடு என அனைத் திலும் தமிழ் மூத்த மொழியாக விளங்குவதால்தான் ஐ.நா. சபையில் பிரதமரால் தமிழை மேற்கோள் காட்ட முடிந்தது. ‘மதிப்புக்குரிய விருந்தினரே!’ என சீன அதிபரை தமிழில் விளிக்க முடிந்தது.

மத்திய அரசு செயல் வடிவில் தமிழை வளர்ப்பதையே தமிழர்கள் விரும்புவார்கள். தமிழ், தமிழர்கள் மீது உண்மையிலேயே அன்பு காட்டுவதானால், ஆட்சி மொழியாக, நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக, தமிழகத் தில் உள்ள மத்திய அரசு அலுவல கங்களில் அலுவல் மொழியாக தமிழை ஆக்க வேண்டும். தமிழ் பயின்ற, தமிழில் பயின்றவர் களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் தமிழை தவிர்க்கக் கூடாது.

சம்ஸ்கிருதம், இந்திக்கு காட்டப்படும் முன்னுரிமையை மூத்த மொழியான தமிழுக்கும் மத்திய அரசு வழங்கவேண்டும். பிரதமர் தமிழ் உச்சரித்ததில் எங்கள் செவி குளிர்ந்தது. ஆனால், இதயத்தைக் குளிரவைக்க இன் னும் ஏராளம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலதிபர்கள் வெங்கடேஷ், கணபதிமந்திரம், நிதி ஆலோசகர் கார்த்திகேயன், வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் உள்ளிட் டோர் பேசினர். இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x